ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 200
ऊर्ध्व मूलं अधः शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम् .. (अध्याय १५ - श्लोक १)
ஊர்த்வ மூலம் அதஹ ஶாகம் அஶ்வத்தம் ப்ராஹுரவ்யயம் .. (அத்யாயம் 15 - ஶ்லோகம் 1)
Oordhva Moolam Adhah Shakkham Aswattham Praahuravyayam .. (Chapter 15 - Shlokam 1)
அர்தம் : இந்த ஸம்ஸாரத்தை வேர்கள் மேலும் கிளைகள் கீழும் உள்ள தலைகீழான அஶ்வத்த மரமாகவும் என்றும் அழியாததாகவும் கருதுகின்றனர் ..
ரெண்டு வகை ஜீவன்கள் .. ஸ்தாவரம் மற்றும் ஜங்கமம் .. ஒரே இடத்தில் இருக்கும் ஸ்தாவரம் .. மரங்கள் .. இடம் விட்டு இடம் செல்லும் ஜங்கமம் .. மற்ற அனைத்து ஜீவன்களும் ..
மூன்று வகை உயிர்கள் .. இந்த்ரியங்களும் புத்தியும் சிந்தனா ஶக்தியும் அநுபவங்களை ஶேகரித்து வைக்கும் ஆற்றலான சித்தமும் உள்ள மநுஷ்ய ஜீவன் ; ரெண்டாவது வகை ஜீவன் பல்வகை ப்ராணிகளும் பக்ஷிகளும் .. இந்த்ரியங்கள் உண்டு .. ஆயின் புத்தி கிடையாது (தன் அவஶ்யங்களைத் தேடிப் பெறுவதற்கு ஏற்ற குறைந்த பக்ஷ அறிவு உண்டு - ஆங்க்லத்தில் அதை basic instinct என்கிறார்கள் .. புத்தி என்பது சிந்தனை செய்து ஸரி தவறை நிர்ணயம் செய்யும் ஆற்றல் .. மநுஷ்யனுக்கு மாத்ரமே புத்தி உண்டு ..) மூன்றாவது வகை ஜீவன் வ்ருக்ஷங்கள் .. மரம் , செடி , கொடிகள் , புல் கீரை வகைகள் , பாஸி போன்றவை .. இந்த்ரியங்கள் கிடையாது .. உயிர் வாழ்வதற்குத் தேவையான குறைந்த பக்ஷ அறிவு உண்டு .. (இந்த்ரியங்கள் கிடையாது என்று நம் அல்ப அறிவுக்குத் தெரிந்ததைச் சொல்கிறோம் .. அவை பார்க்கின்றனவா , கேட்கின்றனவா , ஸ்பர்ஶத்தை உணர்கின்றனவா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும் ..)
ஹிந்து தர்மத்தில் மரங்கள் மஹத்வம் வாய்ந்தவை .. மரங்களுக்கு உயிர் உண்டு என்பதை நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகள் முன்னரே அறிந்திருந்தனர் .. உயர்ந்து வளர்ந்து பல நூறு வருஷங்களாக நிற்கும் மரங்களை தபஸில் ஈடுபட்டிருக்கும் ர்ஷி முனிகளாக நாம் கருதுகிறோம் .. மரத்தை வெட்டுவது மிகப் பெரும் பாபமாகக் கருதப் படுகிறது .. ஸ்வயத் தேவைக்கு ஒரு மரம் வெட்டப் பட்டால் பத்து மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு .. ஏன் !! ஸாயங்கால ஸூர்ய அஸ்தமனத்திற்குப் பிறகு , மரச் செடிகளில் இருந்து புஷ்பங்களையோ இலையையோ பறிப்பது கூடாது என்பது நம் நம்பிக்கை .. அவையும் நம்மைப் போல தூங்குகின்றன என்று நம்புகிறோம் .. ஒரு மரக்கன்றை நட்டு வளர்ப்பது ஒரு மகனைப் பெற்று வளர்ப்பதற்கு ஈடான புண்ய கார்யமாகக் கருதப் படுகிறது ..
மரங்கள் ஹிந்துக்களின் வாழ்வோடு எவ்வாறு பின்னிப் பிணைந்து உள்ளன என்பதை மேலை தேஶங்களுக்கு ஒரு முறை சென்று வந்தால் உணரலாம் .. தென்னாஃப்ரிகாவில் மூன்று ஜனக்கூட்டங்கள் வாழ்கின்றன .. உள்ளூர் வாஸிகளான கறுப்பர்கள் வாழும் பகுதிகள் மரம் , செடி , கொடி எதுவும் இல்லாது வெறுமையாக இருக்கும் .. 500 வர்ஷங்கள் முன்னர் அங்கு குடி ஏறிய ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் வாழும் பகுதிகளில் பூக்காத , காய்க்காத அலங்கார மரச் செடிகள் , முள் வகைகள் ஆகியவை இருக்கும் .. (பூச்சிகளும் பறவைகளும் வந்து அழகான தோட்டத்தை அசிங்கப் படுத்தி விடக் கூடாதாம் ..) 170 வர்ஷங்கள் முன்னர் வெள்ளைக்காரனால் கொத்தடிமைகளாக அங்கு அழைத்துச் செல்லப் பட்ட ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் வாழை , மா , வேம்பு , அரளி , செம்பருத்தி , துலஸி , புல் என்று அனைத்து வகை ஸ்தாவரங்களும் இருக்கும் .. ஹிந்துக்களின் வாழ்க்கையில் பிறந்தன்று தேவைப்படும் தொட்டில் முதல் இறந்த பின் தஹனத்திற்குப் பயன்படும் கட்டை வரை மரங்கள் கூடவே வருகின்றன ..
மரங்கள் , செடிகள் அனைத்தும் உயிர் வகைகள் தான் .. ஆயினும் , ஸில மரங்களும் செடிகளும் பகவானின் ஸ்வரூபமாகவே பூஜிக்கப் படுகின்றன .. அஶ்வத்த வ்ருக்ஷத்தில் (அரஸ மரம்) ப்ரஹ்மா , விஷ்ணு , மஹேஶ் மூவரும் வஸிப்பதாகக் கருதப் படுகிறது .. அஶ்வத்த மர ப்ரதக்ஷிணம் வெகு விஶேஷமாகக் கருதப் படுகிறது ..
ஆல மரம் மாங்கல்ய பாக்யத்திற்காகவும் குலம் தழைப்பதற்கு ஒரு குழந்தை வேண்டியும் பூஜிக்கப் படுகிறது ..
வேப்ப மரம் அம்பாளின் ஸ்வரூபமாக பூஜிக்கப் படுகிறது ..
துலஸி ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமாக பூஜிக்கப் படுகிறது ..
ஹிந்துவின் ஒவ்வொரு ஆலயத்திலும் ஒரு ஸ்தல வ்ருக்ஷம் உண்டு .. ஸந்நதியில் பகவத் ஸ்வரூபம் பூஜிக்கப் படுவதைப் போலவே இந்த ஸ்தல வ்ருக்ஷமும் பூஜிக்கப் படுகிறது ..
ஐரோப்பாவிலும் Pagan என்று அழைக்கப் பட்டு , க்றிஸ்தவ ராஜ்யங்கள் மற்றும் க்றிஸ்தவ சர்ச்கள் மூலம் பலப்பல கொடுமைகளுக்கு ஆளாகும் ஜன ஸமூஹத்தினர் மரங்களை வழிபடுகின்றனர் .. அல்லா ஒருவனைத் தவிர , ஏஶு ஒருவனைத் தவிர வேறு எவனையும் , வேறு எதையும் தெய்வ ஸ்வருபமாக வழிபட மாட்டோம் என்ற வறட்டுப் பிடிவாதத்தில் இருந்திடும் ரெண்டு மதங்கள் இஸ்லாமும் க்றிஸ்தவமும் தான் .. ஒன்று வறண்ட பாலைவனத்தில் இருக்கிறது .. மற்றொன்று இயற்கை வளங்களை ஸுறண்டி , மரங்களை அழித்து , பூமியைப் பாலைவனமாக மாற்றப் பெரும் ப்ரயத்னம் செய்து கொண்டிருக்கிறது ..
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் உலகத்தை ஒரு வ்ருக்ஷமாக , அஶ்வத்த வ்ருக்ஷமாக .. ஆனால் தலை கீழ் வ்ருக்ஷமாக வர்ணிக்கிறார் .. தானே சொல்வதாகக் கூறாமல் பலரும் இவ்வாறு சொல்கின்றனர் என்கிறார் .. மரம் வேரை ஸார்ந்து இருப்பது போல , ஸம்ஸாரமும் பரமாத்மனை ஸார்ந்து இருக்கிறது .. அனைத்து உயிர்களும் அனைத்தையும் அவனிடம் இருந்து பெறுகின்றன .. ஸம்ஸ்க்ருதத்தில் வேருக்கு மூலம் என்று பெயர் .. ஸம்ஸாரத்திற்கு மூலம் ஸ்ரீ பரமாத்மன் .. ஸ்ரீ பரமாத்மன் மேலே இருப்பதாக மநுஷ்யன் கருதுவதாலும் மரத்தின் வேர்கள் மேலே இருப்பதாகவும் கருத்து .. மரத்தின் இலைகள் , கிளைகள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன .. வேர் மாத்ரம் நிலைத்து இருக்கிறது .. அதே போல , ஸம்ஸாரம் மாறிக் கொண்டே இருந்தாலும் ஸ்ரீ பரமாத்மன் என்றும் நிலைத்து இருக்கிறார் ..
ஸம்ஸார ரூப அஶ்வத்த மரத்தை 'ப்ராஹு அவ்யயம்' அதாவது அழியாதது என்கின்றனர் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஸம்ஸாரம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது .. மாறிக் கொண்டுதான் இருக்கிறது .. ஆனால் , மநுஷ்யனுடைய அல்பப் பார்வைக்கு அது அழியாததைப் போல , நிரந்தரம் போலத் தோன்றுகிறது .. எனவே , அவ்யயம் என்கிறான் மநுஷ்யன் .. மரத்தின் இலைகள் , தளிர்கள் , கிளைகள் , பூக்கள் ஆகியவற்றின் கவர்ச்சியில் சிக்காமல் வேரை நோக்க வேண்டும் .. In fact , அடுத்த ஶ்லோகத்தில் வைராக்யம் என்ற உறுதியான வாளால் மரத்தை வெட்டி விடு என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. அடுத்த சொற்றொடரைப் படியுங்கள் ..

Comments
Post a Comment