ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 202
तमेव प्रपद्ये .. (अध्याय १५ - श्लोक ४)
தமேவ ப்ரபத்யே ;.. (அத்யாயம் 15 - ஶ்லோகம் 4)
Tameva Prapadye .. (Chapter 15 - Shlokam 4)
அர்தம் : தங்களையே ஶரண் அடைகிறேன் ..
ஶரணம் அஹம் ப்ரபத்யே .. நான் உன்னை ஶரணடைகிறேன் .. ஶரணடைதல் ஹிந்து தர்மத்தில் மாத்ரமே உள்ள விஶேஷம் .. ஶரண் அடைந்தவனுக்கும் அடிமைக்கும் வித்யாஸம் உண்டு .. வலுக்கட்டாயமாக அடிமை ஆக்கப் படுகிறான் .. ஸ்வயமாக ஶரணடைகிறான் .. பலஹீனன் அடிமை ஆகிறான் .. அபாரமான மனோபலம் கொண்டவன் ஶரண் அடைகிறான் .. யஜமானின் பண பலத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிமை ஆகிறான் .. யஜமானால் விட்டெறியப் படும் பணமும் , யஜமான் கையால் உயர்த்தப் படும் சாட்டையும் அடிமைக்குத் தளைகள் .. அவனைக் கட்டிப் போடுபவை .. அவனது அடிமை ஶாஸனத்தை வலுப்படுத்துபவை .. ஶரணடைபவனுக்கு இத்தகைய தளைகள் எதுவும் கிடையாது .. ஶரணடைந்து விட்டாலும் அவன் முழு ஸ்வதந்த்ரமானவன் .. அவனுடைய அவஶ்யங்கள் அனைத்தும் யஜமானால் பூர்தி செய்யப் படுகின்றன .. ஆனால் , அதைப் பற்றி எந்தக் கவலையும் ஶரண் அடைந்தவனுக்குக் கிடையாது .. அத்தகைய எதிர்ப்பார்ப்பும் கிடையாது .. அடிமை ஆதல் ஒரு வ்யாபார ஒப்பந்தம் .. ஶரணடைதல் அன்பின் வெளிப்பாடு .. பக்தியின் வெளிப்பாடு .. அடிமைக்கும் யஜமானனுக்கும் உணர்வு பூர்வமான உறவோ பந்தமோ இருந்திடாது .. இருந்தால் கோபமும் வெறுப்பும் இருந்திடலாம் .. ஶரணடைந்தவனுக்கு யஜமானைப் பற்றி அன்பு மாத்ரமே இருந்திடும் .. அடிமை தனது நிலையை (அடிமைத் தனத்தை) உணர்ந்தால் அதிலிருந்து வெளியேற முற்படுவான் .. ஶரணடைந்தவன் அந்நிலையில் நிரந்தரமாக இருக்க விரும்பிடுவான் .. அடிமையின் மனஸ் ஶோகம் நிறைந்து இருக்கும் .. அடிமைத்தனம் ஒரு ஶோகநிலை .. ஶரணடைந்தவன் மனஸ் ஆனந்தம் நிறைந்து இருக்கும் .. ப்ரபத்ய நிலை ஒரு ஆனந்த நிலை ..
ஶரணாகதி எப்பொழுதும் ஒரு தூய நபரிடமே , உன்னத அமைப்பிடமே இருக்க முடியும் .. பகவான் , ஒரு மஹோன்னத லக்ஷ்யம் , அல்லது ஒரு மஹோன்னத லக்ஷ்யத்திற்கு கார்யம் செய்யும் அமைப்பு .. வெகு அரிதாக , ஶரணாகதி ஒரு மநுஷ்யனிடம் , சிறந்த , உயர்ந்த மநுஷ்யனிடம் , லவ லேஶமும் ஸ்வய நலம் இல்லாத மநுஷ்யனிடம் , உன்னத லக்ஷ்யத்திற்கு ஸமர்பணம் ஆன மநுஷ்யனிடம் ஆக முடியும் .. மநுஷ்யனுக்கே அடிமை ஆக முடியும் .. அப்பட்டமான ஸ்வயநலம் கொண்ட மநுஷ்யன் , கொடூர மனஸ் கொண்ட மநுஷ்யன் , மற்றவரின் பலஹீனத்தை , மற்றவரின் உழைப்பை , மற்றவரின் இயலாமையை ஸுரண்டும் மனப்பான்மை கொண்ட மநுஷ்யன் அல்லது இத்தகைய மநுஷ்யர்களின் ஸமூஹத்திடமே அடிமை ஆக முடியும் ..

Comments
Post a Comment