ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 204
मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति .. (अध्याय १५ - श्लोक ७)
மனஹ ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தானி கர்ஷதி .. (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7)
Manah Shashtaaneendriyaani Prakrutisthaani Karshati .. (Chapter 15 - Shlokam 7)
அர்தம் : ஜீவன்கள் ப்ரக்ருதியில் நிலைத்து இருக்கும் ஐந்து இந்த்ரியங்கள் மற்றும் ஆறாவது இந்த்ரியமான மனஸ் மூலம் ஸம்ஸாரத்தால் ஆகர்ஷிக்கப் பட்டு , ஸம்ஸாரத்தில் திளைத்து விடுகின்றன ..
ஜீவன் ஸ்ரீ பரமாத்மாவின் அம்ஶம் என்றால் தனது திவ்ய ஸ்திதியில் , தெய்வீகத் தன்மையில் ஸஹஜமாக இருந்திட வேண்டாமா ?? அந்நிலையில் இருந்து ஏன் நழுவுகிறது ?? பௌதீக ஸம்ஸாரத்தில் ஏன் லயிக்கிறது ?? ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வதற்கேற்ப , "நம் இந்த்ரியங்களும் மனஸும் ப்ரக்ருதியில் நிலைத்து இருக்கின்றன .. ஸம்ஸாரத்தின் கவர்ச்சியில் கவரப் படுகின்றன .. அதில் லயித்து விடுகின்றன .. இந்த்ரியங்கள் மற்றும் மனஸின் பின்னால் மயங்கும் ஜீவன் தம் திவ்யத் தன்மையை மறந்து விடுகிறது ..
ஶரீரம் ஏந்திய ஜீவன் அந்த ஶரீரத்தில் ஐந்து இந்த்ரியங்களைப் பெறுகிறது .. இந்த இந்த்ரியங்கள் க்ஞானேந்த்ரியங்கள் என்று பெயர் .. ஸம்ஸாரம் பற்றிய க்ஞானம் பெறுவதற்கும் அநுபவம் பெறுவதற்கும் இவையே கருவிகள் .. கண்கள் நிறம் , வடிவம் மற்றும் ரூபத்தைப் பற்றிய விவரங்களைக் கொண்டு வருகின்றன .. காதுகள் ஶப்தங்களைப் பற்றிய க்ஞானத்தைப் பெறுவதற்கான கருவிகள் .. நாஸி கந்தங்களைப் பற்றிய விவரங்களை ஶேகரித்து புத்திக்கு அநுப்புகிறது .. ருசிகளைப் பற்றிய க்ஞானத்தைப் பெற உதவியாக இருக்கும் கரணம் நாக்கு .. தோல் தொடு உணர்ச்சிகளை அறிந்திட உதவிடும் உபகரணம் .. இந்த்ரியங்கள் இல்லாமல் உலகத்தைப் பற்றிய இந்த ஞானத்தைப் பெறுவது மநுஷ்யனுக்கு இயலாத ஒன்றாகி விடும் ..
இந்த்ரியங்கள் உபகரணங்கள் மாத்ரமே .. அவற்றுக்கு ஸ்வந்த இஷ்டங்களோ வெறுப்புகளோ கிடையாது .. கண் ஒரு காக்ஷியைக் கண்டால் , அதை மிகைப்படுத்தாமல் , வெட்டித் திருத்தாமல் , உள்ளதை உள்ளபடி புத்திக்கு அநுப்பி விடும் .. அநுப்புவது என்று சொல்வதும் தவறு .. கண் ஒரு த்வாரம் மாத்ரமே .. வெளி திஶையில் திறக்கும் ஒரு த்வாரம் .. உலகத்தை நோக்கித் திறக்கும் ஒரு த்வாரம் .. வெளியில் இருந்து வரு செய்தியை (காக்ஷியை) கூட்டவோ குறைக்கவோ கண்ணுக்கு ஆற்றல் கிடையாது .. மற்ற நான்கு இந்த்ரியங்களும் இதே வகைதான் .. எனவே , இந்த்ரியங்களில் தோஷம் கிடையாது ..
மனஸ் ஆறாவது இந்த்ரியம் .. ஒரு இந்த்ரியத்துடன் மனஸ் இணைந்தால் , மனஸ் இணைந்தால் மாத்ரமே ப்ரஶ்னை ஆரம்பிக்கும் .. மனஸ் இஷ்டம் - அநிஷ்டம் , விருப்பு - வெறுப்பு , பிடித்தவை - பிடிக்காதவை ஆகியவற்றின் சேமிப்புக் கிடங்கு .. மனஸ் தனது இவ்விருப்பு வெறுப்புகளை இந்த்ரியங்கள் மீது திணிக்கிறது .. தனது விருப்பங்களுக்கு ஏற்ற விஷயங்களை நோக்கி இந்த்ரியங்களை ஏவி விடுகிறது .. அதே விஷயங்களின் அநுபவங்கள் மீண்டும் மீண்டும் கிடைத்திட முயல்கிறது .. எதிர் திஶையில் மனஸ் தன் விருப்பத்திற்கு மாறான விஷயங்களைத் தவிர்க்கவும் இந்த்ரியங்களைக் கட்டாயப் படுத்துகிறது .. இவ்வாறு மனஸின் உதவியுடன் ஐந்து இந்த்ரியங்களும் ஸம்ஸார விஷயங்களால் கவரப்பட்டு , ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்கிறது .. ஸ்தூல ஶரீரத்தைப் போலவே , மனஸும் இந்த்ரியங்களும் ப்ரக்ருதிஸ்த , அதாவது ப்ரக்ருதியில் நிலைத்திருப்பவை .. ஸம்ஸார விஷயங்களால் கவரப்படுவது ஸஹஜமே .. ஆனால் , ஜீவன் தன்னை மனஸுடனும் இந்த்ரியங்களுடனும் இணைத்துக் கொள்ளும் போது , தன்னையே மனஸாகவும் இந்த்ரியங்களாகவும் கருதிக் கொள்ளும் போது , தன் தெய்வத் தன்மையை மறந்து ,இந்த ஆறின் பின் தொடர்ந்து , விஷயங்களில் லயித்து ஸம்ஸாரத்தில் சிக்கி விடுகிறது .. இதுவே ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்று ..

Comments
Post a Comment