ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 205
वायुर्गन्धान इवाशयात .. (अध्याय १५ - श्लोक ८)
வாயுர் கந்தான் இவாஶயத் .. (அத்யாயம் 15 - ஶ்லோகம் 8)
Vaayur Gandhaan Ivaashayat .. (Chapter 15 - Shlokam 8)
அர்தம் : வாயு கந்தத்தை எவ்வாறு ஏந்திச் செல்கிறதோ ..
பஞ்ச பூதங்கள் .. ஐந்து பூதங்கள் .. ப்ரக்ருதியில் ஐந்து ஆதாரமான தத்வங்கள் .. நிலம் (ப்ருத்வீ) , நீர் (ஆப்) , காற்று (வாயு) , அக்னி , ஆகாஶம் (நப) ...
நமக்கு ஐந்து க்ஞானேந்த்ரியங்கள் .. கண் (சக்ஷு) , காது (கர்ண) , நாஸி , நாக்கு (ஜிஹ்வா) , தோல் (த்வசா) ..
இந்த உறுப்புக்கள் இந்த்ரியங்கள் இல்லை .. அவற்றின் ஆற்றல்கள் தான் இந்த்ரியங்கள் .. தர்ஶனம் (பார்த்தல்) , ஶ்ரவணம் (கேட்டல்) , ஜிக்ரன் (நுகர்தல்) , அஶ்னன் (ருசித்தல்) , ஸ்பர்ஶனம் (தொடுதல்) இவை ஆற்றல்கள் ..
ஐந்து விஷயங்கள் .. த்ருஶ்யம் (காக்ஷி) .. ஶப்தம் , கந்தம் , ருசி மற்றும் ஸ்பர்ஶம் (தொடு உணர்வு) .. இவை இந்த்ரியங்களுக்கான விஷயங்கள் அல்லது தீனி ..
ஒவ்வொரு இந்த்ரியத்திற்கும் பஞ்ச பூதத்தில் ஒன்று தான் ப்ரதானம் .. கண் - அக்னி ; காது - ஆகாஶம் ; நாஸி - வாயு ; நாக்கு - ஜலம் ; தோல் - ப்ருத்வீ அல்லது மண் ..
கந்தத்தை , வாஸனையை எடுத்துச் செல்வது வாயு .. காற்று வீசவில்லை என்றால் நம்மால் வாஸனையை நுகர முடியாது .. வாயு வாஸனையை வெளிப்படுத்தும் அந்தப் பொருளைத் தொட வேண்டும் .. அந்தக் காற்று நம்மை நோக்கி வீச வேண்டும் .. நாம் நாஸி நுகர் மொட்டுக்களைத் தொட வேண்டும் .. காற்றில் மிதந்து வரும் வாசனையை நம் நாஸியின் நுகர் மொட்டுக்கள் ஏற்று , மின் காந்த அலைகளாக (Electro - magnetic waves) மாற்றி , nasal chord வழியாக புத்திக்கு அநுப்பி வைக்கும் .. புத்தி இந்த அலைகளை ஆராய்ந்து , சித்தத்தில் பதிவாகி உள்ள பழைய அநுபவ நினைவுகளுடன் ஒப்பிட்டு , கந்தத்தை அடையாளம் காண்கிறது ..
கந்தத்தை ஏந்தி வரும் வாயுவைப் போல ... இந்த உபமானம் இங்கு ஜீவனுக்கு உபயோகப் படுத்தப் பட்டுள்ளது .. இந்த்ரியங்கள் மற்றும் மனஸுடன் ஒன்றிய ஆத்மா (ஸூக்ஷ்ம ஶரீரங்களுடன் பிணைந்த ஆத்மா ஜீவன் எனப்படுகிறது ..) ப்ரக்ருதியின் கவர்ச்சியில் மயங்கி , அவற்றில் லயித்து , சிக்கி விடுகிறது .. ஒரு ஶரீரத்தை விட்டுப் பிரியும் போது , தன்னுடன் விஷய வாஸனைகளை ஏந்திச் செல்கிறது .. உலக விஷயங்களுடன் இணைப்பு என்ற இந்த்ரியங்களின் அநுபவங்களின் ஸாரமே வாஸனை .. ஜீவன் இந்த வாஸனைகளை ஏந்தி , ஸ்தூல ஶரீரத்தைப் பிரிகிறது .. அந்த வாஸனைகளுடன் அடுத்த தேஹத்தைப் பெறுகிறது .. பூர்வ ஜன்ம வாஸனைகள் எனப்படும் இவையே நமக்குள் குணங்களில் , ஆற்றல்களில் , தன்மைகளில் காணப்படும் வித்யாஸங்களுக்குக் காரணம் .. குழந்தைப் பர்வத்தில் சில குழந்தைகள் அபாரமான திறமைகள் பெற்று விளங்குவது அந்த ஜீவனின் பூர்வ ஜன்ம வாஸனைகளின் வெளிப்பாடு ..

Comments
Post a Comment