ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 206
सोमः भूत्वा रसात्मकः .. (अध्याय १५ - श्लोक १३)
ஸோமஹ பூத்வா ரஸாத்மகஹ .. (அத்யாயம் 15 - ஶ்லோகம் 13)
Somah Bhootvaa Rasaatmakah .. (Chapter 15 - Shlokam 13)
அர்தம் : சந்த்ரன் ஆகி நானே ஸ்தாவர உயிர்களுக்கு ஜீவ ரஸம் கொடுக்கிறேன் ..
ஸ்தாவர உயிர்களுக்கு ஜீவ ரஸம் அளிப்பது சந்த்ரனே .. மரம் செடி கொடிகளுக்கு ஜவ ஸத்து அளிப்பது சந்த்ரனே .. குறிப்பாக , ஔஷத மூலிகைகளுக்கு ஔஷதத் தன்மை சந்த்ரனிடம் இருந்து கிடைப்பதே .. இது நம் ஆயுர்வேத ஶாஸ்த்ரம் சொல்வது .. சந்த்ர கிரணங்கள் அஶ்வின் மாஸ பௌர்ணமி அன்று அம்ருதத்தைப் பொழிகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அன்று ராத்ரீ வேளையில் திறந்தவெளியில் , சந்த்ர ஒளியில் பால் காய்ச்சிக் குடிக்கும் பண்டிகை உண்டு .. சந்த்ரன் நம் மனஸை பாதிக்கிறது என்கிறது ஆயுர்வேதம் .. இன்று கருவிகளின் ஸஹாயத்துடன் ஆராய்ச்சிகள் செய்து , அறிக்கைகளின் அடிப்படையில் முடிவுக்கு வரும் விக்ஞான முறை வழக்கத்தில் உள்ளது .. நம் ஶாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை இந்த விக்ஞானம் ஏற்றுக் கொள்வதில்லை .. விக்ஞானம் இன்னம் நம் ஶாஸ்த்ரங்களின் அளவிற்கு முதிர்ச்சி அடையவில்லை என்று தான் நான் சொல்வேன் .. இன்னம் சில வர்ஷங்களில் ஏற்றுக் கொள்ளும் ..
Comments
Post a Comment