ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 207
पचामि अन्नं चतुर्विधम् .. (अध्याय १५ - श्लोक १४)
பசாமி அன்னம் சதுர் விதம் .. (அத்யாயம் 15 - ஶ்லோகம் 14)
Pachaami Annam ChaturVidham .. (Chapter 15 - Shlokam 14)
அர்தம் : நான்கு வகையான போஜனங்களை நானே ஜீர்ணம் செய்கிறேன் ..
போஜனம் நான்கு வகைப் படும் .. த்ருட வகைப் பதார்தங்கள் .. ஸாதம் , ரொட்டி , கறி , ஶர்கரைப் பொங்கல் , லட்டு போன்ற தித்திப்புக்கள் .. இவற்றைக் கடித்து மெல்ல வேண்டும் .. த்ரவ்ய வகைப் பதார்தங்கள் .. நீர் , மோர் , பால் , காஃபி போன்றவை .. குடித்து பருகப் படும் பதார்தங்கள் இவை .. மூன்றாவது வகை உறிஞ்ஜு அருந்தப் படும் உணவு வகை .. உ . ம் .. மாம்பழக் கதுப்பு , ஸ்ரீ கண்ட , தயிர் , பாயஸம் , கூழ் போன்றவை .. நான்காவது வகை நக்கிச் சாப்பிடக் கூடியவை .. ஊறுகாய் , தேன் , நெய் , வெண்ணை , ஐஸ் க்ரீம் போன்றவை .. நம் அன்றாட போஜனத்தில் இந்நான்கு வகைகளும் இருந்தால் தான் அது பூர்ணமான போஜனம் ..
அன்றாட போஜனத்தில் இந்நான்கு வகைகளும் இருக்க வேண்டும் .. ஆறு ருசிகளும் இருக்க வேண்டும் .. பல வர்ணங்களின் கலவையாக இருக்க வேண்டும் .. ஸமீபத்தில் ஸமைக்கப் பட்டு , சூடாக இருந்திட வேண்டும் .. அன்புடன் பரிமாறப்பட்டு , ருசி அறிந்து ருசித்து , ஆனந்தமாக , மெளனமாக உட்கொள்ளப் பட வேண்டும் .. ஹிந்து தர்ம ஶாஸ்த்ரப் படி , போஜனம் வெறும் பௌதீக வஸ்து இல்லை .. வெறும் ஶரீரத் தேவைக்காக மாத்ரம் இல்லை போஜனம் .. போஜனத்தில் கலை இருக்கிறது .. ஸமைப்பது அறுபத்து நான்கு ஆயக் கலைகளில் ஒன்று .. போஜனத்தில் ஸ்நேஹ ப்ரேம ஸம்பந்தம் இருக்கிறது .. பாட்டி கையால் ஸாப்பிடுவதும் , அம்மா ஸமைத்ததை உண்பதும் , மனைவி பரிமாறுவதை உண்பதும் ஹோடலில் எவனோ ஸமைத்து எவனோ பரிமாறுவதை தின்பதும் ஒன்றாகுமா ?? போஜனத்தில் தர்மம் இருக்கிறது .. பகிரப்பட்டு , வெறும் மநுஷ்யர்களுடன் அல்ல , மற்ற வகை ஜீவன்களுடனும் பகிர்ந்து , மிச்சத்தை ஸாப்பிட வேண்டும் .. இதில் பொருளாதாரமும் உண்டு .. போஜனம் நம் அருகாமையில் விளையும் பொருட்களைக் கொண்டு ஸமைக்கப் பட வேண்டும் .. ஶரீரத்தின் பசியைப் போக்கும் ஶரீர தர்மமும் போஜனத்திற்கு உண்டு ..
போஜனம் செய்ததன் விளைவு மனஸில் ஸந்தோஷம் அல்லது பூர்ண த்ருப்தி மலர வேண்டும் .. போஜனம் ஶ்ரத்தையுடனும் முழு கவனத்துடனும் ஸமைக்கப் பட வேண்டும் .. மனஸில் அன்புடன் ஸமைக்கப் பட்டு , பரிமாறப் பட வேண்டும் .. ஆனந்தமாக , ப்ரேமையுடன் சாப்பிடப் பட வேண்டும் .. ருசியை அநுபவிப்பதில் ஆனந்தம் .. ஸமைத்தவரைப் பற்றிய ப்ரேமை ..
உண்ணப்படும் உணவு நம் ஶரீரத்தில் ஜீர்ணம் ஆவது மிக அத்புதமான ஒரு கார்யம் .. இந்தக் கார்யத்தில் பங்கெடுக்கும் கருவிகள் ... வாய் , பற்கள் , நாக்கு , தொண்டை , வயிறு , பேங்க்ரியாஸ் , பைல் , கால் ப்ளேடார் , குடல் போன்ற உறுப்புக்களும் , பலப்பல நாடிகளும் நரம்புகளும் , லக்ஷக் கணக்கான ஸெல்களும் .. இவை அனைத்தும் நம் வயிற்றுப் பகுதியில் உள்ளன .. போஜனம் செய்யும்போது இவை சுறுசுறுப்பாகின்றன .. இவை அதிக பக்ஷத் திறனுடன் செயல்பட , நாம் உண்ணம்போது இப்பகுதியில் அதிக ரக்த ஓட்டம் இருந்திட வேண்டும் .. எனவே , ஸம்மணம் இட்டு அல்லது குத்திட்டு அமர்ந்து ஸாப்பிடுதலே நல்லது .. காலில் ரக்த ஓட்டம் குறைந்து , வயிற்றுப பகுதியில் அதிகமாகும் .. நின்று கொண்டு ஸாப்பிடுவதும் கால்களைத் தொங்க போட்டு உட்கார்ந்து ஸாப்பிடுவதும் நம் உடலுக்கு நாம் செய்யும் த்ரோஹம் என்றால் மிகை ஆகாது ..
போஜனத்தை நினைத்தால் தான் நம் நாடி நரம்புகள் வேலை செய்யும் .. உதாஹரணத்திற்கு , புளியை நினைத்தால் வாயில் உமிழ் நீர் ஸுரப்பது நாம் அனைவரும் அநுபவித்ததே .. போஜனத்தை ஜீர்ணம் செய்யும் ஸூக்ஷ்ம அங்கங்கள் திறம்பட தம் கார்யத்தைச் செய்ய வேண்டும் என்றால் , மெளனமாக , போஜனத்தின் ருசியை அநுபவித்து சாப்பிட வேண்டும் .. டீ வி பார்த்துக் கொண்டோ , நாவல் படித்துக் கொண்டோ உண்பதும் ஶரீரத்திற்கு நாம் செய்யும் த்ரோஹமே ..
போஜனம் வெறும் பௌதீக வாஸ்து இல்லை .. அது ஜீவனுள்ளது .. நம் தேஹத்தில் ரக்தம் , மாம்ஸம் , எலும்பு , தசை , தோல் , மஜ்ஜை , மூளை போன்ற அனைத்தும் உருவாகின்றன .. போஜனத்தின் பௌதீக விளைவுகள் இவை .. போஜனத்தால் நம் கண்களின் ஒளி , காதுகளின் கூர்மை , மற்ற இந்த்ரியங்களின் செயல்திறன் அதிகம் ஆகின்றன .. போஜனத்தால் நம் புத்தி கூர்மை ஆகிறது .. மனஸில் குணங்கள் ஓங்குகின்றன .. மனஸின் உணர்வுகள் தெளிவாகின்றன .. இவை ஸூக்ஷ்ம விளைவுகள் ..
இதற்கு மேலே , "அன்னம் ப்ரஹ்மம்" என்கிறது வேதம் .. போஜனம் ஸ்ரீ பரமாத்மாவின் ஸ்வரூபம் என்கிறது வேதம் ..
போஜனத்தின் ஜீர்ணம் வெறும் யந்த்ர ரீதியான கார்யம் இல்லை .. ஸ்ரீ பரமாத்மாவின் கார்யம் .. வெளிப்படையாக பலக் கருவிகள் பங்கெடுக்கின்றன .. இவை நித்யமானவை அல்ல .. அவற்றின் ஆற்றல் அக்ஷயமானதல்ல .. அக்கருவிகளுக்கு அவற்றுக்குரிய ஆற்றல்களை அளிப்பவன் அவனல்லவோ !! ஶரீரத்தில் ஸ்ரீ பரமாத்மாவின் அம்ஶமான ஆத்மா இருப்பதாலேயே இந்த ஜட உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கின்றன .. எனவே , ஸ்ரீ பரமாத்மனே நாம் உண்ணும் போஜனத்தை ஜீர்ணம் செய்கிறார் என்பதில் என்ன ஸந்தேஹம் !!

Comments
Post a Comment