ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 221
अल्प बुद्धयः (अध्याय १६ - श्लोक ९)
அல்ப புத்தயஹ .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9)
Alpa Budhdhayah (Chapter 16 - Shloka 9)
அர்தம் : அல்ப புத்தி கொண்ட அஸுரன் ..
அல்பம் என்று நம் வீடுகளில் திட்டுவார்கள் .. அல்பம் என்றால் மிகச் சிறிய .. மிகச் சிறிய விஷயங்களுக்கு ஆஶைப் படுதல் , மிகச் சிறிய விஷயங்களுக்கு வருந்துதல் , மிகச் சிறியதாக தன்னைக் கருதிக் கொள்ளுதல் .. அல்ப புத்தி .. மிகச் சிறிய விஷயங்களால் திருப்தி அடைபவன் அல்ப ஸந்துஷ்டன் ..
அஸுரன் அல்ப புத்தி கொண்டவன் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஆதி அந்தம் அற்ற , நித்யமான , ஸர்வ ஶக்திகளும் வாய்ந்த , ஸர்வமும் அறிந்த , ஸர்வத்திற்கும் ஆதாரமாகத் திகழும் ஸ்ரீ பரமாத்மாவின் அம்ஶமாகத் தன்னைக் கருதிடாமல் .. அழிந்திடும் ஶரீரமாக , அல்ப காலம் வாழ்ந்து மடிந்திடும் ஒரு உயிராக , அல்ப புத்தியும் அல்ப ஆற்றலும் அல்ப ஶக்தியும் கொண்ட ஒரு பிறவியாக , தன் அல்ப ஸுகங்களை பூர்தி செய்திடவும் பலரை ஸார்ந்து வாழ்ந்திடும் ஒரு அடிமையாகக் கருதிக் கொள்கிறான் ..
இன்றைய உலகத்தில் கம்யூனிஸம் பேசுபவர்களும் நாஸ்திகம் பேசும் கழகங்களும் இத்தகைய அல்ப புத்தியை வெளிப் படுத்துகின்றனர் .. இவர்களின் கருத்தில் "இந்த உலகம் ஒன்றுதான் , ஶரீரம் ஒன்றுதான் , அதன் தேவைகள் மாத்ரம் தான் , புலன்களால் உணரக் கூடிய ஸுகம் மாத்ரமே" , .. "தெய்வம் , தபஸ் , ஆன்மீகம் , வ்ரதம் , ஒழுக்கம் , கட்டுப்பாடு , பக்தி , தேஶபக்தி , த்யாகம் , எளிமை , ஸத்யம் , எல்லாம் அவஶ்யம் இல்லாதவை" .. "விவாஹம் , மதம் , தேஶம் போன்ற ஏற்பாடுகள் அழிக்கப் பட வேண்டும்" ..
அல்ப புத்தியால் மூடத்தனமாக இறுகப் பற்றிய அஸத்ய அல்பக் கருத்தை உலகத்தில் நிலை நாட்டிட , கம்யூனிஸம் பேசிய கம்யூனிஸ்ட்கள் ஐரோப்பாவின் பல தேஶங்களிலும் சைனாவிலும் ராஜ்யத்தைக் கைப்பற்றி , பெரும் முயற்சிகள் செய்தனர் .. நாஸ்திகம் பேசிய கழகங்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து பெரும் முயற்சிகள் செய்தன .. அம்முயற்சிகளின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை 5150 வர்ஷங்கள் முன்னர் ஸ்ரீ க்ருஷ்ணன் விவரித்திருக்கிறார் .. அடுத்த பகுதியில் பார்ப்போம் ..
Comments
Post a Comment