ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 222
प्रभवन्त्युग्र कर्माणः क्षयाय जगतः अहिताः (अध्याय १६ - श्लोक ९)
ப்ரபவந்த்யுக்ர கர்மாணஹ க்ஷயாய ஜகதஹ அஹிதாஹ (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9)
Prabhavantyugra Karmaanah Kshayaaya Jagato(a)Hitaah (Chapter 16 - Shlokam 9)
அர்தம் : உக்ர செயல்கள் செய்து நாஶம் விளைவிக்கும் உலகத்தின் எதிரிகள் அஸுரர்கள் ..
விஷ மருந்து அடித்து கொசுவைக் கொல்ல வேண்டாம் , கரப்பான் பூச்சியைக் கொல்ல வேண்டாம் என்று சிந்திக்கிற குடும்பங்கள் பல உண்டு .. ஏன் ?? வீட்டினுள் பூறான் , அதற்கும் மேல் பாம்பு வந்தாலும் , "அது பாட்டுக்குப் போகட்டும் .. கொல்லாதே" என்று சொல்லும் ப்ராஹ்மணக் குடும்பங்களை நான் அறிவேன் .. நான் தங்கி இருந்த வீடுகளில் , மூன்று வீடுகளில் பாம்பு வந்திருக்கிறது .. அடிக்க மனஸ் வரவில்லை .. அஸுரன் உக்ர கர்மங்களைச் செய்து , உலகத்திற்கு நாஶம் விளைவிப்பான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. அஸுரனை உலகத்தின் எதிரி என்கிறார் ..
ட்யாநன்மென் சதுக்கத்தில் மிலிடரி டேங்கை ஏற்றி நூற்றுக் கணக்கான மாணவர்களைக் கொன்ற சீன கம்யூனிஸ அரஸு , அல்லா ஹு அக்பர் என்று கூவிக் கொண்டே , தம் எதிரிகளைக் கழுத்தை அறுத்துக் கொல்லும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் .. லக்ஷ லக்ஷ எதிரிகளை ஸைபீரியா பாலைவனத்தில் கொண்டு போய் சேர்த்து , துடிக்க வைத்துக் கொன்ற ரஷ்ய கம்யூனிஸ அரஸு .. குஜராத் கோத்ராவில் ரயில் பெட்டியை வெளியில் இருந்து பூட்டி விட்டு , 60 ஹிந்துக்களை , குழந்தைகள் மற்றும் பெண்களைச் சேர்த்து , கதறக் கதற , எரித்துக் கொன்ற முஸ்லீம் வெறியர்களின் கூட்டம் .. தம் தலைவி ஊழல் குற்றச் சாட்டில் சிறைக்குச் சென்றதால் , பஸ்ஸுடன் உள்ளே இருந்த இளம் கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்ற அ தி மு க 'கடவுள் இல்லை' கோஷ்டி .. முன்னாள் ப்ரதமர் ஸ்ரீமதி இந்திரா ஃபெரோஸ் கான் கொல்லப் பட்ட ஸமயத்தில் , தன்னுடைய கக்ஷி வெறியர்கள் தெருத் தெருவாக அலைந்து , ஸீக்கியர்களின் குடும்பங்களைக் கொடூரமாக எரித்த போது , "ஒரு பெரிய மரம் வீழ்ந்தால் , சில சிறிய செடிகளும் உயிர்களும் அழிந்து போவது இயற்கை" என்று அந்தக் கொடூரத்திற்கு வக்காலத்து வாங்கிய காங்க்ரஸ் தலைவர் ராஜீவ் .. இவை எல்லாம் உக்ரச் செயல்கள் புரிந்த அஸுர மனப்பான்மை கொண்ட மநுஷ்யர்கள் மற்றும் அமைப்புகளின் ஸமீபத்திய உதாஹரணங்கள் ..
உலகத்திற்குப் பெரும் நாஶம் விளைவிப்பான் அஸுரன் .. ஸமுதாயத்திற்கு நாஶம் விளைவிப்பான் அஸுரன் .. தமிழகத்தில் "கடவுள் இல்லை" கழகங்களின் ஐம்பது வர்ஷ ஆட்சியில் .. ஸமூஹ ஒழுக்கம் அழிந்தது .. சாராய விற்பனை பெரும் ஸாதனை ஆனது .. தலைமுறைகள் பலி ஆயின .. இயற்கை வளம் சுரண்டப் பட்டது .. எனக்கு மணல் , உனக்கு ஜல்லிக்கல் , அவனுக்கு கிரேனைட் என்று பாகம் பிரித்துக் கொள்ளை தொடர்ந்தது .. நதிகள் வறண்டு போயின .. கோவில்கள் சுரண்டப் பட்டன .. ஶிலைகள் கடத்தப் பட்டன .. நகைகள் மாற்றப் பட்டன .. கோயில் நிலங்களும் குளங்களும் ஆக்ரமிக்கப் பட்டு அபஹரிக்கப் பட்டன .. நீர்வளம் குன்றியது .. தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியது .. நாஶம் .. நாஶம் .. நாஶம் ..
Comments
Post a Comment