ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 225
चिन्तामपरिमेयां .. (अध्याय १६ - श्लोक ११)
சிந்தாமபரிமேயாம் .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 11)
Chintaam Aparimeyaam .. (Chapter 16 - Shloka 11)
அர்தம் : எல்லை அற்ற கவலைகள் ..
கவலை அழிக்கும் .. ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு சொல் உண்டு .. चिता दहति देहः । चिन्ता दहति चित्तः । சிதை தேஹத்தை எரிக்கும் .. சிந்தை அல்லது கவலை மனஸை எரிக்கும் .. இன்று வெளிப்படும் நோய்கள் பெரும்பாலும் மனஸில் தேங்கி நிற்கும் கவலையினால் பிறக்கின்றன ..
கவலைப் படுதல் ஒரு ஸ்வபாவம் .. 'நானே பொறுப்பு , நானே செய்கிறேன்' என்ற எண்ணம் , 'எதிர்க்காலத்தை அறிந்திடும் ஆர்வம்' , 'நம்பிக்கை இல்லாமை' , இவையே கவலைக்குக் காரணம் .. கவலை இல்லாமை பொறுப்பற்ற தன்மை என்று ஒரு கருத்து நிலவுகிறது .. அதனால் , கவலைப் படாமல் எப்படி இருக்க முடியும் என்று கேள்வி கேட்போர் பலர் ..
கவலைப் படுதல் என்பது நம்மை தற்காலத்தில் இருந்து , நிகழ் காலத்தில் இருந்து விலக்குகிறது .. நிகழ்காலத்தில் இருந்து விலகினால் மனஸின் மகிழ்ச்சி மறைந்து , மனஸை ஶோகம் கவ்வி விடும் ..
கவலை மனஸில் பயத்தைத் தோற்றுவிக்கும் .. நடக்குமா நடக்காதா என்பது கவலை .. மாறி நடந்து விட்டால் என்பது பயம் .. ஶோகமும் பயமும் அஸுரத் தன்மைகள் ..
கவலை ஸ்வபாவம் ஆகி விட்டால் , எல்லை அற்றதாகவே இருக்கும் .. கால எல்லை , விஷய எல்லை ரெண்டும் இருந்திடாது .. (இவ்வளவு காலம் மாத்ரமே கவலைப் படுவேன் .. இந்த விஷயத்தைப் பற்றி மாத்ரம் கவலைப் படுவேன் .) இது அஸுரத் தன்மை ..

Comments
Post a Comment