ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 226
प्रलयान्तामुपाश्रिताः .. (अध्याय १६ - श्लोक ११)
ப்ரலயாந்தாம் உபாஶ்ரிதாஹ் .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 11)
Pralyaantaam Upaashritaah .. (Chapter 16 - Shloka 11)
அர்தம் : ப்ரலய காலம் வரைக்கும் அவஶ்யமான விஷயங்களை சேகரிப்பது ..
மநுஷ்யனுக்கு அவஶ்யங்கள் உண்டு .. அவற்றைப் பூர்தி செய்திட , வஸ்துக்களின் அவஶ்யம் உண்டு .. உதாஹரணமாக , பசியை த்ருப்தி செய்திட போஜனம் தேவை .. அதற்கான பொருட்களை தினந்தினம் வாங்கிக் கொள்ளலாம் .. ஏற்பாடு இருந்தால் ஒரு வாரத்திற்கோ மாஸத்திற்கோ சேகரித்து வைக்கலாம் .. ஆனால் , வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை தேவையான ஸாமக்ரியை வாங்கி , சேகரித்து வைக்க விரும்பினால் ?? இதையே அஸுர மனப்பான்மை என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
சேகரித்தல் ஆன்மீக ஸாதனைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் .. அபரிக்ரஹம் தெய்வீக மனப்பான்மை ஆகும் .. பதஞ்ஜலி யோக ஸூத்ரத்தில் அபரிக்ரஹம் ஐந்து அடிப்படை யமங்களில் ஒன்று .. அபரிக்ரஹம் என்றால் சேகரிக்காமல் இருப்பது .. குறைந்த பக்ஷத் தேவைகளுடன் வாழ்தல் ..
பொருளாதார ரீதியாகவும் , இயற்கைக்கும் சேகரித்தல் பாதகம் விளைவிப்பதே .. இன்றைய பொருளாதாரம் அதிக , மிக அதிக வாங்குதலை ஊக்குவிக்கிறது .. அவர்களது கருத்தில் எத்தனைக்கு எத்தனை அதிகமாக வாங்கப் படுகிறதோ , அத்தனைக்கு அத்தனை போஷாக்குப் பெறுகிறது பொருளாதாரம் .. இதன் விளைவாக , நம் வீடுகள் ஸாமான்களின் கிடங்குகள் ஆகி விட்டன .. எதைப் பார்த்தாலும் வாங்குதல் , கவர்ச்சியாக விற்கப் படும் அனைத்தையும் வாங்குதல் , டிஸ்கவுண்ட் கொடுக்கப் படும் எதையும் வாங்குதல் , "இலவஸம்" என்று அல்பமான எதை இணைத்தாலும் , வாங்கி விடுதல் , கடனில் வாங்குதல் , தேவையா இல்லையா என்று யோஜிக்காமல் வாங்குதல் , (பார் கோட் இருப்பதால்) விலையையும் பார்க்காமல் வாங்குதல் .. பயன் படுத்துகிறோமோ இல்லையோ , அனைத்தையும் வீட்டில் போட்டு வைத்தல் .. மநுஷ்யர்கள் உட்கார , நடக்க , கை கால் விரிக்க இடம் இல்லாத இடம் ஆகி விட்டன நம் வீடுகள் .. நம் வீடுகளில் சப்பல்கள் , ஷூக்கள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் , மொபைல் ஃபோன்கள் , சார்ஜர்கள் மலை மலையாகக் குவிந்து இருக்கின்றன .. வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை தெருவோரத் தொட்டிகளில் நிரம்பி வழிகின்றன .. நகரங்களில் இருந்து வெளியேறும் குப்பை க்ராமங்களில் பல ஏக்கர் பரப்புள்ள பூமியின் மேல் குவிக்கப் படுகிறது .. வலிமை உள்ள தேஶங்களின் குப்பை ஏழை தேஶங்களில் குவிக்கப் படுகின்றன .. இன்று நதிகள் , ஸமுத்ரங்கள் நகரக் குப்பையால் குழம்பி விட்டன ..
ப்லாஸ்டிக் விஷயத்தில் நடக்கும் கூத்து கேலிக்கூத்தாகி விட்டது .. ப்லாஸ்டிக்கைக் கண்டு பிடித்தது அவர்கள் .. ப்லாஸ்டிக்கின் உத்பத்தி அவர்கள் செய்தனர் .. மார்கெட்டில் ப்லாஸ்டிக்கை நிரப்பினர் .. எங்கும் ப்லாஸ்டிக் , எதிலும் ப்லாஸ்டிக் என்றாக்கினர் .. ஜனங்களின் பழக்கத்தைக் கெடுத்தனர் .. இன்று உரத்த குரலில் ப்லாஸ்டிக்கின் எதிராக ப்ரசாரம் செய்கின்றனர் .. ப்லாஸ்டிக்கின் பெயரில் ஸாதாரண ஜனங்களை தண்டிக்கின்றனர் ..
Comments
Post a Comment