ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 228
अन्यायेनार्थ सञ्चयान् .. (अध्याय १६ - श्लोक १२)
அந்யாயேனார்த ஸஞ்சயான் .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 12)
Anyaayenaartha Sanchayaan .. (Chapter 16 - Shlok 12)
அர்தம் : அந்யாயமான வழிகளில் தனம் சேகரிப்பான் அஸுரன் ..
அர்தம் என்பது நான்கு புருஷார்தங்களில் ஒன்று .. தர்மம் , அர்தம் , காமம் மற்றும் மோக்ஷம் .. நம் வாழ்க்கையில் நாம் ஸாதிக்க வேண்டிய நான்கு .. உலக வாழ்க்கை சீராகவும் வெற்றிகரமாகவும் அமைந்திட , அர்தம் சேகரித்தல் , தனம் ஸம்பாதித்தல் அவஶ்யமே ..
தர்மம் மற்றும் மோக்ஷத்திற்கு ஸமமாக அர்தம் மற்றும் காமத்தை வைத்து இருக்கிறார்களே !! அர்தமும் காமமும் அவஶ்யம் தான் .. தர்மத்தின் கட்டுக்குள் .. அதர்மமான அர்தமும் அதர்மமான காமமும் பாபமே .. ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு அந்யாயமான வழிகளில் தனம் ஸம்பாதிப்பதை அஸுரத் தன்மை என்கிறார் .. சென்ற ஶ்லோகத்தில் தம்பத்தை , ஆடம்பரமாக , வெறும் காட்டுவதற்கு செலவழிப்பதை ஆஸுரி என்றார் .. ஸம்பாதிப்பதும் செலவழிப்பதும் அல்ல ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு ப்ரஶ்னை .. அந்யாயமான வழிகளில் ஸம்பாதிப்பதும் ஸமுதாயத்திற்குக் காட்டுவதற்காக செலவழிப்பதும் தான் ..
அந்யாயமான வழிகளில் ஸம்பாதனம் என்றால் ?? இயற்கையை , மநுஷ்ய ஶக்தியை சுரண்டுதல் ; இயற்கைக்கு , மநுஷ்ய ஸமுதாயத்திற்கு நாஶம் உண்டாக்குதல் ; பிறரின் சொத்தை , செல்வத்தை அபஹரித்தல் ; உழைப்பை விட அதிகமாக ஊதியம் பெறுதல் ; ராஜ்யத்தின் விதிகளை மீறி , ஏமாற்றி தனம் ஸம்பாதித்தல் .. போன்று ..
இயற்கையை சுரண்டுதல் : ஃபேக்டரியின் அவஶ்யத்திற்காக நதியை மாஸு படுத்தல் .. நதியையே ஆக்ரமித்து , நதி நீர் முழுவதையும் பயன்படுத்துதல் .. ஆழமாக , இன்னம் ஆழமாக துளை போட்டு , நிலத்தடி நீரை சுரண்டி எடுத்தல் .. ராஜ்ய ஶக்திகளுக்கு லஞ்ஜம் கொடுத்து , வனத்தையும் மலையையும் ஆக்ரமித்து ஆன்மீக ஃபேக்டரி நடத்துதல் .. மரங்களை வெட்டி ஸம்பாதித்தல் .. அதிக விளைச்சலுக்காக பூமியில் ரஸாயனங்களைக் கொட்டி பூமியை வறண்டு போகச் செய்தல் .. நதியில் சேரும் மணலை "தன் அப்பன் வழியில் கிடைத்த சீதனம்" என்று கருதி கொள்ளை அடித்தல் .. தவறான வழிமுறைகளால் காற்றை மாஸுபடுத்தல் .. பொது சொத்தான நதி நீர் , மின்ஸாரம் ஆகியவற்றைத் திருடுதல் ..
மநுஷ்ய ஶக்தியை சுரண்டல் : குழந்தைத் தொழிலாளிகளை அமர்த்தல் .. தூர தூர ப்ரதேஶங்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து , அவர்களுக்கு அடிப்படை வஸதிகளையும் செய்து தராமல் இருத்தல் .. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கருவிகளுக்கு செலவிடாமல் தனத்தை மிச்சப்படுத்தல் .. சிறு வ்யவஸாயிகளை 50,000 , 60,000 அதிக ரூபாயின் ஆஶை காட்டி , நிலத்தை வாங்கி , அங்கு கோடிக் கணக்கில் லாபம் தரும் ஃபேக்டரி அமைத்தல் ..
இயற்கையில் நாஶம் : நீர் , வாயு , நிலத்தின் மாஸு படுத்தல் இதுவே இயற்கையில் நாம் விளைவித்திடும் பெரும் நாஶம் .. நீர் வளம் , வன வளம் , கனிம வளம் இவற்றை தம் பேராஶைக்கு பலி ஆக்குதல் .. பூமியில் ஸத்தை ரஸாயனங்கள் மூலம் அழித்து , அதன் விளைவாக ஜனங்களின் ஆரோக்யத்தையும் கெடுத்தல் ..
மநுஷ்ய ஸமுதாயத்தில் நாஶம் : க்ராமங்களின் அழிவு , சிறு தொழில்களின் அழிவு , கைவினை தொழில்களின் அழிவு , ஜன நெருக்கடியில் விழி பிதுங்கும் நகரங்கள் , ...
மற்றவரின் தானம் மற்றும் சொத்தை அபஹரித்தல் : ஆக்ரமிப்பு இது தேஶம் முழுவதும் பரவி இருக்கும் மஹாரோகம் .. ஆலய நிலங்களின் ஆக்ரமிப்பு , நதி , குளம் , வாய்க்கால் , ஏரிகளின் ஆக்ரமிப்பு .. ரயில்வே மற்றும் அந்ய ராஜ்ய சொத்தின் ஆக்ரமிப்பு .. வீதிகளின் ஆக்ரமிப்பு , நடைபாதைகள் ஆக்ரமிப்பு , என்ற இந்த ராக்ஷஸ மனப்பான்மை வெகு வேகமாக பரவி வருகிறது .. அரசியல் கட்சிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் ரௌடிக் கூட்டங்களின் புதிய தொழில் ஒன்று வளர்ந்து வருகிறது .. "கட்டப் பஞ்சாயத்து" கட்டையை , உருட்டுக் கட்டையை கையில் வைத்தபடி பஞ்சாயத்து பேசுதல் .. ரௌடித்தனத்தின் பயம் காட்டி , குறைந்த விலையில் வீடுகளைப் பறிமுதல் செய்தல் , ஸாதாரண ஜனங்களின் பணம் மற்றும் சொத்துக்களைப் பறித்தல் .. ஃபண்ட்ஸ் , சி(சீ)ட் ஃபண்ட்ஸ் , வைப்பு நிதி .. போன்ற பெயர்களில் , அதிக வட்டியின் ஆஶை காட்டி , ஸினிமா நடிக நடிகையரின் முகம் காட்டி , வாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் கொள்ளை அடித்தல் ..
உழைப்பை விட அதிக ஸம்மானம் வாங்குதல் : வைதீக புரோஹிதர் , Motivation பேச்சாளர் , யோகம் கற்றுத் தருபவர் , ஆன்மீக ப்ரவசனம் அல்லது கதா காலக்ஷேபம் செய்பவர் , ஸங்கீத வித்வான் , ட்யூஷன் நடத்துபவர் , ஆடோ ஓட்டுநர் ஆகிய தொழில்களில் உள்ளோரில் (பெரும்பான்மை) காணப்படும் நோய் இது .. ஈரோடு நகரத்தில் நேதாஜி வீதியின் ஓரத்தில் ஒரு சக்கிலியன் , வயஸில் பெரியவர் .. கிழிந்த ஜிப்பாவும் வேஷ்டியும் .. பொத்தல் விழுந்து தைக்கப் பட்ட குடை .. நகரத்தில் பெரும்பாலோர் பெரிய கம்பெனிகளின் சப்பல் மற்றும் ஷூக்களை வாங்கும் இன்றைய காலம் .. மிகக் குறைவான வருமானம் .. என் சப்பலின் கட்டை விரல் அறுந்து இருந்தது .. தைக்கக் கொடுத்தேன் .. தைத்து முடித்தார் .. "எத்தனை??" என்று கேட்டேன் .. "ஏதோ கொடுங்கள்" என்றார் .. அனைவரும் ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் பேரம் பேசியதன் அலுப்பு போலும் .. நான் ஒரு ரெண்டு ரூபாய் நோட் கொடுத்தேன் .. நடக்கத் தொடங்கினேன் .. கை தட்டி அழைத்தார் .. "ரெண்டு ரூபாய் கிழிந்த நோட்" என்கிறாரோ .. "ரெண்டு ரூபாய் போதாது" என்கிறாரோ என்று எண்ணிய படி திரும்பினேன் .. திரும்பிய என் கையில் ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்தார் .. நான் எதிர்ப்பார்க்கவில்லை .. "பரவாயில்லை .. வைத்துக் கொள்ளுங்கள் " என்றேன் .. "உழைப்பை விட அதிக ஸம்மானம் எனக்கோ என் குடும்பத்திற்கோ நன்மை செய்யாது", என்றார் .. ஸமுதாயத்தில் இதற்கு எதிர்மாறான சூழ்நிலையே உள்ளது .. ஒரு ப்ரபல பேச்சாளர் .. 'You Can Win' என்று தம் கட்டை விரலைக் காட்டி கோடி கோடியாக ஸம்பாதித்தவர் .. நாகபூரில் என் நண்பனின் கல்லூரியில் பேச வந்தார் .. ஒரு நபருக்கு 25,000 ரூபாய் .. அவருக்கு 18,000 , நண்பருக்கு 7,000 .. அந்த 18,000த்தில் 11,000 கறுப்புப் பணமாகவும் (கேஷ்ஆகவும் ) 7,000 வெள்ளைப் பணமாகவும் வேண்டும் என்றார் .. உழைப்பை மீறிய பணம் வேண்டும் அதுவும் கறுப்பாக வேண்டும் .
விதிகளை மீறுதல் .. இதுவும் நம் தேஶம் முழுவதும் பரவி உள்ள நோய் .. வரி ஏய்ப்பு , விற்பனையைக் குறைத்துக் காட்டுதல் , தொழிலாளர்களுக்கு உரிய ESI , PPF , பென்ஷன் போன்றவற்றைக் கட்டாமல் இருத்தல் .. தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுதல் , கட்டடங்கள் கட்டும் போது ராஜ்ய விதிகளை மீறுதல் , லஞ்ஜம் கொடுத்து ஸமாளித்தல் .. பெரும்பாலோருக்கு விதிகள் தெரியாது .. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை .. ஆர்வம் கொண்டு அறிந்தால் அதைக் கடைப்பிடிப்பதற்கு வேண்டிய மன உறுதி இல்லை .. மன உறுதியும் இருந்து கடைப் பிடிப்பேன் என்று ஸங்கல்பமும் இருந்தால் மொத்த சூழ்நிலையும் ராஜ்ய அமைப்புகளும் அலுவலகங்களும் நேர்மையானவர்களுக்குக் கஷ்டம் கொடுப்பதற்காகவும் , மன உளைச்சல் அளிப்பதற்காகவும் , ப்ரதிகூலமாகவும் உள்ளன .. லஞ்ஜ லாவண்யத்திற்கு ஸாதகமாகவும் விதி மீறல்களுக்கு அநுகூலமாகவும் உள்ளன .. லஞ்ஜம் அதிகமாகப் புழலும் அரசு அலுவலகம் எது ?? ஞாயிற்றுக் கிழமையும் திறந்து வைத்து வேலை நடக்கும் அலுவலகம் .. மிகப் பெரிய விபத்து நடந்தால் சில தினங்களுக்கு சர்சை நடக்கிறது .. விழிப்புணர்வு ஏற்படுகிறது .. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறது .. மூல அமைப்பு லஞ்ஜத்திற்கும் விதி மீறலுக்கும் குறுக்கு வழிகளுக்கும் ஸாதகமாகவே உள்ளது ..

Comments
Post a Comment