ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 229
ईश्वरोऽहं .. (अध्याय १६ - श्लोक १४)
ஈஶ்வரோ(அ)ஹம் .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 14)
Easwaro(a)ham .. (Chapter 16 - Shloka 14)
அர்தம் : நானே ஈஶ்வரன் என்பது அஸுரனின் நம்பிக்கை ..
அந்த பரமாத்மனை தன்னை விட அதிக ஶக்திஶாலி என்றே உணர்ந்து இருந்தான் .. அவனது ஆக்ஞை இல்லாமல் எதுவும் நடக்காது என்பதை அறிந்து இருந்தான் .. அதனால் தான் அவனது பெயரில் கோரமான தபஸ் இயற்றி , அவனிடம் அமரத்வத்திற்கான வரம் வாங்கினான் .. வரம் கிடைத்த உடனே , தன்னை மிகப் பெரும் ஶக்திஶாலியாகக் கருதத் தொடங்கினான் .. ஸ்ரீ பரமனை நிராகரித்தான் .. இல்லை என்று மறுத்தான் .. தன்னையே ஈஶ்வரனாக அறிவித்தான் .. தனது பெயரே எல்லா இடங்களிலும் ஒலித்திடவும் , தனது படமே எல்லா இடங்களிலும் ஜ்வலித்திடவும் ஏற்பாடு செய்தான் .. ஸ்ரீமன் நாராயணனின் பஜனை பாடவும் , பெயர் சொல்லவும் தடை விதித்தான் .. இதையே அஸுர மனப்பான்மை என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
இது வெறும் புராணக் கதை அல்ல .. இன்றும் காணப்படும் காக்ஷி .. நம்மைச் சுற்றிலும் இத்தகைய அஸுரத் தன்மையை வெளிப்படுத்தும் பல உதாஹரணங்கள் உள்ளன .. உதாஹரணங்களைக் காணும் முன் இந்த வார்தையைப் புரிந்து கொள்வோம் .. ஐஶ்வர்யம் என்றால் அதிகாரம் , ஆதிக்யம் அல்லது ஸ்வாமித்வம் .. ஈஶ்வரன் என்றால் எவனிடம் முழு அதிகாரமும் உள்ளதோ அவன் .. அனைத்து விஷயங்களிலும் எவனது ஆதிக்யம் உள்ளதோ அவன் .. எவனுடைய விருப்பப்படி , எவனுடைய திட்டப்படி அனைத்து கார்யங்களும் நடக்கின்றனவோ அவன் .. எவனுடைய விருப்பத்தை மீறி எதுவும் நடந்திடாதோ அவன் ஈஶ்வரன் .. எவன் விதித்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு இந்த அண்ட சராசரம் முழுவதும் , இங்குள்ள ஒவ்வொரு அணுவும் அசைகிறதோ , சுற்றுகிறதோ , நிற்கிறதோ , அழிகிறதோ அவன் ஈஶ்வரன் .. ஈஶ்வரன் இல்லை என்று ஒருவன் கூறினால் அதை விவேகம் இல்லாத மூடனின் பிதற்றல் என்று ஒதுக்கலாம் .. ஸூக்ஷ்மமானதைப் பார்க்க முடியாதவனின் குறைப் பார்வை விளக்கம் என்று மன்னிக்கலாம் .. இந்த்ரியங்களே பரமம் , இந்த்ரியங்களால் உணர முடிவதே ஸத்யம் என்பவன் தன்னால் இந்த்ரியங்களைத் தாண்டி எழ முடியாத இயலாமையை வெளிப்படுத்துகிறான் என்று பரிதாபப் படலாம் .. பல மநுஷ்யர்களில் இத்தகையக் குறை உண்டு .. ஆனால் ஒருவன் தன்னையே ஈஶ்வரன் என்று கருதினால் ?? அவன் அஸத்யத்தை இறுகப் பற்றி உள்ளான் .. அவன் பொய்யன் .. அவன் கபடன் என்றே அர்தம் ..
நமக்கு நம் ஶரீரம் மீது முழு ஆதிக்யம் உள்ளதா ?? ஸ்வாமித்வம் உள்ளதா ?? நம் ஶரீரம் நம் ஸ்வய விருப்பப் படி செயல்படுகிறதா ?? யோகாஸனம் செய்யும் போது , ஶரீரத்தை ஒரு நிலையில் அசையாமல் வைக்கிறோம் .. புற ஶரீரத்தை .. ஆனால் ஜீர்ண அமைப்பு , ஶ்வாஸ அமைப்பு , ஹ்ருதயத் துடிப்பு , ரக்த ஓட்டம் ஆகியவற்றின் மீது நம் ஆட்சி உள்ளதா ? இந்த அமைப்புகள் கார்யம் செய்வதும் , சில நேரங்களில் கெட்டுப் போவதும் நம்மைக் கேட்டல்ல .. ஶரீரத்தில் விளைந்திடும் நோய் , முதுமை , மரணம் ஆகியவற்றின் மீது நம் ஸ்வாமித்வம் இருக்கிறதா ? இவை வருகின்றன .. அறிவிப்பு இல்லாமல் வருகின்றன .. உன் அநுமதியையா கோருகின்றன ?? பின் நீ என்ன ஈஶ்வரன் ??
இவை ஶரீரம் ஸம்பந்தமான விஷயங்கள் .. ஶரீரமே நமக்கு மிக அருகில் இருப்பது .. வெளியே உள்ளவை , நம் குடும்பத்தினர் , மனைவி , மக்கள் , அண்டை அயலார் , ஊரில் நிகழ்வுகள் , மரம் , ஸூர்ய வெப்பம் , காற்று , மழை , பூகம்பம் போன்ற பாதிப்புகள் மற்ற எத்தனையோ விஷயங்கள் மீது நம் கட்டுப்பாடு உண்டா ?? இல்லை .. லவலேஶமும் இல்லை .. இவை செயல் பட நம் அநுமதி என்பது வெகு தூரம் , நாம் இருப்பதும் ஒரு பொருட்டல்ல என்பதே ஸத்யம் .. இவை தம் இஷ்டப் படி செயல்படுகின்றன .. நிகழ்கின்றன .. வேறு ஏதோ ஶக்தியின் விதிகளுக்கு உட்பட்டு , வேறு ஏதோ ஶக்தியின் கட்டளைக்கு இணங்கி ..
பின் எந்த ஆதாரத்தில் , 'ஈஶ்வரோஹம்' அதாவது தன்னையே ஈஶ்வரன் என்று கருதுகிறான் ?? கருதுகிறான் .. ஆதாரம் ஏதும் தேவை இல்லை .. இதுவே அஸுரத் தன்மை ..
இன்றைய அரசியல்வாதிகள் இவ்வகையில் சிறந்த உதாஹரணங்கள் ஆவர் .. கைகளைக் கட்டி , நமஸ்கார நிலையில் கட்டி , பெரியவர்களின் கால்களில் விழுந்து , மற்றவரைக் கெஞ்ஜிக் கூத்தாடி , வீடு வீடாக ஏறி இறங்கி அம்மா அய்யா என்று இரைந்து , தேர்தலில் போட்டி இடுகிறான் .. ஜனநாயகத்தில் ஜனங்கள் ஶக்திவாய்ந்தவர் என்பதை அறிந்திருக்கிறான் .. பதவி கையில் கிடைத்தவுடன் ஹிரண்யகஶிபுவாக மாறுகிறான் .. "ஜனங்களுக்கு என்ன தெரியும் ?? நானே .. என் விருப்பப் படியே" என்று கருதத் தொடங்குகிறான் .. "டேய் !! அடுத்த ஐந்து வர்ஷங்களில் மீண்டும் தேர்தல் வரும் .. ஜனங்களிடம் மீண்டும் போக வேண்டி நேரிடும்" என்றால் "ஐந்து வர்ஷங்கள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம்" என்பான் .. Illustrated Weekly என்ற பத்ரிகை தேஶத்தில் நூறு ப்ரபலமான நபர்களிடம் ஒரே வாக்யத்தில் தம் வாழ்க்கையை விளக்குமாறு கேட்டது .. ராஷ்ட்ரீய ஸ்வயம்ஸேவக ஸங்கம் என்ற அமைப்பின் ரெண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜியிடம் கேட்ட போது , "நான் அல்ல ! நீயே!" என்றார் .. இன்றைய ஸராஸரி அரசியல்வாதி "வேறு எவனும் இல்லை .. நானே" என்கிறான் ..
கட்சிக்காக உழைக்கிறான் .. திறமைஶாலி .. தொண்டர்களின் அநுக்ரஹம் கிடைக்கிறது .. தலைவன் ஆகிறான் .. உடனே தன்னையே கக்ஷியாக பாவிக்கிறான் .. பலரது த்யாகத்தாலும் உழைப்பாலும் விளைந்த கக்ஷியைத் தன் மகனுடையது என்று உயில் எழுதுகிறான் ..
மாணவன் படிக்கிறான் .. நல்ல மார்க் வேண்டுகிறான் .. சுற்றி உள்ள பல மநுஷ்யர்களின் உதவி பெறுகிறான் .. பல அமைப்புகளைப் பயன் படுத்திக் கொள்கிறான் .. பெரும் பட்டங்களைப் பெறுகிறான் .. பட்டங்கள் கிடைத்த மறு க்ஷணம் அவனுள் ஹிரண்யகஶிபு அவதாரம் எடுக்கிறான் .. "என்னுடைய ஸாதனை இது .. என் புத்தி , என் உழைப்பு .. அம்மை என்னடா ? அப்பன் என்னடா ? ஊர் என்னடா ? தேஶம் என்னடா" என்று பாடிய படி பட்டங்களை விற்று வேலை வாங்கப் பறந்து விடுகிறான் ..
ஈஶ்வரோ(அ)ஹம் , நானே ஈஶ்வரன் , இது அஸுரனின் சொல் .. வெறும் சொல் இல்லை , இதுவே அஸுரனது நம்பிக்கை ..

Comments
Post a Comment