ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 232
यो यच्छ्रद्धः स एव सः .. (अध्याय १७ - श्लोक २)
யோ யச்ச்ரத்தஹ ஸ ஏவ ஸஹ .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 2)
Yo Yatchchraddhah Sa Eva Sah .. (Chapter 17 - Shlokam 2)
அர்தம் : ஒருவருடைய ஶ்ரத்தை எவ்வாறு இருக்கிறதோ , அவனும் அதற்கேற்றவாறே இருக்கிறான் ..
As you think , so you become .. என்பது ஆங்க்ல பாஷையில் ஒரு சொல் .. நம் சிந்தனைக்கு ஏற்றவாறு நாம் பரிணமிக்கிறோம் என்று அர்தம் .. மேலோட்டமான வார்தை .. ஶ்ரத்தை என்ற ஆழம் வரை செல்ல ஆற்றல் இல்லாததால் சொல்லப்பட்ட வார்தை .. சிந்திப்பதெல்லாம் நடந்து விடுமா ? நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை என்றான் கண்ணதாஸன் ..
மற்ற அனைத்து விஷயங்களைப் போல , இவ்விஷயத்திம் நாம் ஹிந்துக்கள் ஆங்க்ல அமெரிகர்களை விட பல நூறு படிகள் முன்னேறிய நிலையில் இருக்கிறோம் .. ஶிவோ பூத்வா ஶிவம் யஜேத் என்றனர் நம் முன்னோர்கள் .. ஶிவனைப் பூஜித்தால் , ஶிவனாகவே மாறி விடுவாய் என்றனர் .. இங்கு கீதையில் யோ யச்ச்ரத்தஹ ஸ ஏவ ஸஹ என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. எந்த அளவிற்கு ஶ்ரத்தையோ அந்த அளவிற்கே அவன் .. எத்தகைய ஶ்ரத்தையோ அத்தகையவனே அவன் .. என்கிறார் ..ஶ்ரத்தை என்பது வெறும் thinking / சிந்தனை இல்லை .. ஆங்க்லத்தில் இதற்கு ஸமமான வார்தை கிடையாது .. Conviction , Faith .. என்ற வார்தைகள் ஓரளவிற்குப் பொருந்தும் .. ஆங்க்லம் மாத்ரம் இல்லை .. பாரத தேஶத்தின் அந்ய பாஷைகளிலும் கிடையாது .. ஶ்ரத்தை என்ற வார்தையை பயன்படுத்துகின்றன ..
நம்பிக்கை வேறு .. ஶ்ரத்தை வேறு .. சிந்தனை செய்வது , நினைப்பது , கனவு காண்பது என்பதெல்லாம் வேறு .. Dr அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார் .. கனவு காண்பது நடந்திடாது .. நினைப்பது எல்லாம் நடந்திடாது .. நம்பிக்கை அனைத்தும் பூர்தி ஆகாது .. தன் ஸ்வந்த விஷயங்களுக்கு ஶ்ரத்தை என்பது பொருந்தாது .. "நான் இவ்வாறு ஆக வேண்டும்" , "எனக்கு இது லபிக்க வேண்டும்" , "இதை நான் அடைய வேண்டும்" , "இது எனக்கு நிஶ்சயம் நடந்து விடும்" போன்றவை ஶ்ரத்தை அல்ல .. வெறும் நம்பிக்கைகள் .. கனவுகள் .. ஶ்ரத்தை வாழ்க்கையின் மூல்யங்கள் ஸம்பந்தமானவை .. "ஸத்யம் நிஶ்சயம் ஜயித்திடும்" என்பது ஶ்ரத்தை .. "நேர்மையான உழைப்பிற்கு நிஶ்சயம் ஃபலன் உண்டு" என்பது ஶ்ரத்தை .. "நலன் நாடுதல் , நன்மை விழைதல்" மேல் ஶ்ரத்தை .. "நல்லதற்குக் காலம் உண்டு" என்பது ஶ்ரத்தை .. "எல்லாம் சுழற்சியில் உள்ளன .. நல்லதானாலும் கேடானாலும் தொடர்ந்து நீடிக்காது .. கால ப்ரவாஹத்தில் மாறும் .." என்பது ஶ்ரத்தை .. "நம் மனஸின் அடி ஆழத்தில் உள்ள பாவனைகளை அவன் அறிவான் .. நமக்குக் கிடைப்பவை , உறவுகள் , நண்பர்கள் , யஜமான் , வேலைக்காரன் , வாய்ப்புக்கள் , பதவிகள் என்று அனைத்தும் நம் பாவனைகளுக்கு ஏற்பவே இருந்திடும்" என்பது ஶ்ரத்தை ..
இத்தகைய ஶ்ரத்தைகள் எந்த அளவில் ஒருவனிடம் உள்ளதோ , அந்த அளவிற்கு தான் அவன் , என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments
Post a Comment