ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 234
यक्ष रक्षांसि (यजन्ते) राजसाः .. (अध्याय १७ - श्लोक ४)
யக்ஷ ரக்ஷாம்ஸி (யஜந்தே) ராஜஸா .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4)
Yaksha Rakshaamsi (Yajante) Raajasaa .. (Chapter 17 - Shlokam 4)
அர்தம் : ராஜஸம் ஓங்கிய நபர் யக்ஷர்கள் , ராக்ஷஸர்களை பூஜிப்பான் ..
ராஜஸம் அல்லது ரஜோ குணம் வெளிப்படுத்தும் ப்ரதானத் தன்மை "செயல் புரிவதில் தீவ்ர ஆர்வம்" .. "ஸுகம் மற்றும் ஸுக போகத்தில் நாட்டம்" ராஜஸத்தின் மற்றொரு தன்மை .. மிகையாக ஊதி வளர்ந்த 'நான்' என்ற உணர்வும் ராஜஸத்தின் தன்மை ..
ஒருவனுடைய ஆர்வங்கள் உபாஸனைகள் , மற்ற செயல்கள் எல்லாம் அவனது ஸ்வபாவத்திற்கு ஏற்பவே அமைகின்றன .. ரஜோ குணம் ஓங்கிய ஒருவன் யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும் உபாஸனை செய்வான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. குபேரன் ஒரு யக்ஷன் .. பெரும் செல்வத்தை பாதுகாப்பவன் .. யக்ஷர்கள் ஸுக போகத்திற்கான ஸாதனங்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் .. ராக்ஷஸர்கள் பெரும் அளவில் ஊதி வளர்ந்த 'நான்' உணர்வு கொண்டவர்கள் .. ரஜோ குணி இத்தகைய தன்மைகளை உபாஸிக்கிறான் என்பதில் என்ன ஆஶ்சர்யம் ??
நம்மைச் சுற்றி உள்ள உலகத்தில் பெரும் செல்வந்தர்கள் , விளையாட்டுகளில் பெரும் புகழையும் செல்வத்தையும் ஸம்பாதித்தவர்கள் , ஜுடோ , கராதே , Body - Building (உடல் வளர்ச்சி) , குத்துச் சண்டை (Boxing) , மல்ல யுத்தம் , மலை ஏற்றம் , போன்ற வீர ஸாஹஸ விளையாட்டுக்களில் ஸாதனை புரிந்தவர்கள் , வன்முறை , கொலை , கொள்ளை , கடத்தல் போன்ற குற்றங்கள் புரிந்து ராஜ்யத்தின் சட்டத்திற்கு எதிராகச் செயல் படுபவர்கள் , செய்திப் பத்ரிக்கைகளால் , செய்தி சேனல்களால் ஹீரோக்களாக , பெரும் ஸாதனையாளர்களாக ப்ரபலப் படுத்தப் படும் சந்தனக் கடத்தல் , செம்மரக் கடத்தல் , மணல் கொள்ளை , கற்பழிப்பு , சீட் ஃபண்ட் , ஈமு கோழி ஏமாற்றுக் காரர்கள் ஆகியோரை வழிபடுவான் ரஜோ குணி .. இத்தகையோரைப் பற்றிய செய்திகளை , கதைகளை , வதந்திகளை ஆர்வத்துடன் படிப்பான் ரஜோ குணி .. அவற்றைப் பற்றிப் பேசுவான் ..ரஜோ குணிகளை நம்பித்தான் இன்றைய செய்திப் பத்திரிகைகளும் , செய்தி சேனல்களும் தழைத்துச் செழித்துக் கோடிகளில் புழல்கின்றன ..

Comments
Post a Comment