ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 236
आहाराः सात्त्विकप्रियाः .. (अध्याय १७ - श्लोक ८)
ஆஹாராஹ ஸாத்விக ப்ரியாஹ .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 8)
Aahaaraah Saatvika Priyaah .. (Chapter 17 - Shlokam 8)
அர்தம் : ஸாத்வீகன் இவ்வகை ஆஹாரங்களை விரும்புவான் ..
ஸாத்வீகன் இவ்வகை ஆஹாரங்களை விரும்புவான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. பசிக்கு உட்கொள்வதுதானே ஆஹாரம் .. ஆனால் , வெறும் பசிக்கு என்று இல்லாமல் ருசிக்கும் உண்ணப் படுகிறது .. ருசி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மாறு படுகிறது .. ஒருவனுடைய ருசி அவனது ஸ்வபாவத்தை , அவனிடம் மேலோங்கும் குணத்தை ஸார்ந்தது ..
ப்ரதானமாக ஸாத்வீக குணம் கொண்ட ஒருவன் எத்தகைய ஆஹாரத்தை விரும்பி நாடுவான் ?? ஸாத்வீகம் என்பது க்ஞானம் .. எது சரியோ , எது செய்யத் தகுந்ததோ , அதைச் செய்திடும் தன்மை .. உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை .. பகுத்தறிந்து செய்யப்படும் செயல் ஸாத்வீகத்தின் வெளிப்பாடு .. ஆஹார விஷயத்திலும் இத்தன்மை வெளிப்படும் .. எவ்வகை உணவு ஶரீரத்திற்கு நன்மை செய்யுமோ , ஶரீரத்தின் ஆரோக்யம் பலத்தை வளர்க்குமோ ஸாத்வீகன் அவ்வகை ஆஹாரத்தை நாடுவான் .. எவ்வகை உணவு ஶரீரத்தின் ஜீர்ண ஆற்றலுக்கு ஏற்றதாக உள்ளதோ , எவ்வகை உணவு ஶரீரத்திற்கு அவஶ்யமான ஸத்துக்களை , போஷாக்குகளை அளித்திடுமோ , அவ்வகை ஆஹாரங்களை ஸாத்வீகன் விரும்பி ஏற்பான் .. ஸ்ரீ க்ருஷ்ணனும் இதையே சொல்கிறார் .. உணவு வகைகளைச் சொல்லவில்லை .. ருசிகளைக் குறிப்பிடவில்லை ..
எதைச் சாப்பிட வேண்டும் ?? எது ஶரீரத்திற்கு நன்மை பயக்கும் ?? எது ஶரீரத்திற்கு அவஶ்யமான ஸத்துக்களை , போஷாக்குகளை அளித்திடும் ?? உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவன் பொறுப்பு .. இங்குதான் ருசியின் மஹத்வம் .. அவன் இயல்பாக எதை விரும்புகிறானோ , அதுவே உகந்த உணவு .. இயற்கை மருத்துவ மையத்தில் அளிக்கப் படும் உணவு , ஹ்ருதய அறுவைச் சிகித்ஸைக்குப் பரிந்து உரைக்கப் படும் உணவு .. மருந்தாக அளிக்கப் படும் இந்த உணவு ஸாத்வீகனுக்கு இயல்பாகவே பிடித்தமானவை ..
ஸமுதாயத்தில் ஸாத்வீகத்தைப் போற்றுவதற்கான ஒரு ஏற்பாடு தான் ப்ராஹ்மண ஸமுதாயம் .. ப்ராஹ்மண வீடுகளில் உண்ணப்படும் ஆஹாரத்தை கவனியுங்கள் .. மிதமான ருசியுடன் .. நீர் நிறைந்த , நெய் நிறைந்த உணவு .. Fresh உணவு .. அடுப்பில் இருந்து நேரே உணவுத் தட்டிற்கு வரும் உணவு .. தினம் தினம் கீரையும் மோரும் உள்ள உணவு .. பரபரப்பாக உண்ணும் நபர்களுக்கும் , மிகையான உறைப்பும் கரிப்பும் புளிப்பும் மிகுந்த ஆஹாரத்தைத் தின்பவர்களுக்கும் , எண்ணையில் பொரித்த உணவு வகைகளையும் வறுத்த வகை உணவுகளை ருசிப்பவர்களுக்கும் ப்ராஹ்மண குடும்பங்களில் உண்ணப்படும் போஜனம் ருசிக்காது .. உப்பு சப்பில்லாத உணவு என்று கிண்டல் அடிக்கப் படும் .. ஆனால் , இத்தகைய உணவே பெரும் நோய்க் கண்டவர்களுக்கு , உடல் ஆரோக்யத்திற்கு உகந்த உணவு என்று ஸிஃபாரிஷ் (இது ஒரு உருது வார்தை ..) சிபாரிசு செய்யப் படுகிறது ..
Comments
Post a Comment