ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 237
आहारा राजसस्येष्टा .. (अध्याय १७ - श्लोक ८)
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 9)
Aahaaraa Raajasasyeshtaa .. (Chapter 17 - Shlokam 9)
அர்தம் : ராஜஸனுக்கு இவ்வகை ஆஹாரம் இஷ்டமானது ..
ராஜஸனுக்கு இஷ்டமான ஆஹாரம் பற்றி குறிப்பிடும் போது உணவு வகைகளைக் குறிப்பிடவில்லை ஸ்ரீ க்ருஷ்ணன் .. ருசிகளைக் குறிப்பிடுகிறார் .. இவ்வகை ஆஹாரங்களின் விளைவுகளையும் குறிப்பிடுகிறார் ..
(கட்வாம்ல) .. கசப்பான உணவு , புளிப்பான உணவு , (லவணாத்யுஷ்ண) உப்பு நிறைந்த கார வகை உணவுகள் , அதிக உஷ்ணமான உணவு வகைகள் , (தீக்ஷ்ண ருக்ஷ விதாஹினஹ) உறைப்பான உணவு வகைகள் , வறண்டு போன உணவு வகைகள் , எண்ணையில் பொரிக்கப்பட்டு தாஹத்தை ஏற்படுத்தும் உணவுகள் .. இவை எல்லாம் ராஜஸனுக்குப் பிடித்தமான உணவு வகைகள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
ராஜஸன் பரபரப்பானவன் .. செயல்களில் ஈடுபட்டிருக்க விரும்புபவன் .. மிக வலிமையான நான் - எனது உணர்வுகளைக் கொண்டவன் .. ஆஹாரம் உட்கொள்வதும் அவனுக்கு ஒரு பரபரப்பான செயலே .. மிதமான ருசிகள் அவனுள் பரபரப்பை ஏற்படுத்தாது .. அதீத ருசிகளையே அவன் விரும்பிடுவான் .. அதிகக் கசப்பு , மிகையான காரம் , மிகையான உறைப்பு , அதிகப் புளிப்பு நிறைந்த உணவுகளே அவன் நாடுபவை .. மிகையான சூட்டுடன் அவன் உணவை அருந்திடுவான் .. எண்ணையில் பொறித்த வகைகளை , வறுத்து வறண்டு போன வகைகளை அவன் விரும்பிடுவான் .. ஒரு பக்ஷம் வியர்வைக் கொட்ட வேண்டும் .. ஒரு பக்ஷம் 'ஸ் ஸ் ஸ்' என்று அலற வேண்டும் .. ஒரு பக்ஷம் தொண்டை வறண்டு கடும் தாஹம் தூண்டப்பட்டு 'தண்ணீரைப் பருக வேண்டும் .. மற்றொரு பக்ஷம் உணவையும் தொடர்ந்து அருந்த வேண்டும் .. இதுதான் ராஜஸன் .. உணவருந்தலே அவனுக்கு ஒரு பரபரப்பான செயல் ..
ருசிகளைக் குறிப்பிட்ட ஸ்ரீ க்ருஷ்ணன் இவ்வகை உணவுகளின் விளைவுகளையும் குறிப்பிடுகிறார் .. து:க ஶோக ஆமய ப்ரதா என்கிறான் .. து:க என்றால் கஷ்டம் அல்லது வேதனை .. ஶோக என்றால் வருத்தம் .. ஆமய என்றால் நோய் .. ஶரீரத்திற்கு நோய் .. அதனால் மனஸிற்கு வருத்தம் மற்றும் ஶரீரத்திற்கும் மனஸிற்கும் கஷ்டம் .. இன்று பெரும்பாலான நோய்களுக்கு , சிகித்ஸைக்குப் பிறகு பெரும் நோயில் இருந்து ஸஹஜ ஆரோக்யத்திற்குத் திரும்பும் போது , இவ்வகை உணவுகள் தவிர்க்கப் படுகின்றன .. அல்ஸர் , ஹ்ருதய விகாரங்கள் , டயாபிடீஸ் , கிட்னீ செயலிழப்பு , உறக்கமின்மை போன்ற நோய்கள் பீடித்த நோயாளிகளுக்கு , அதீத ருசி இல்லாமல் மிதமான ருசி கொண்ட உணவும் , எண்ணையில் பொறிக்கப் படாமல் வேக வைத்த உணவுகளும் , மிதமானச் சூட்டுடன் கூடிய உணவுகளும் ஆரோக்யத்திற்குச் சிறந்தவையாகப் பரிந்து அளிக்கப் படுகின்றன ..
Comments
Post a Comment