ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 238
भोजनम तामसप्रियम .. (अध्याय १७ - श्लोक 10)
போஜனம் தாமஸ ப்ரியம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 10)
Bhojanam Tamasapriyam .. (Chapter 17 - Shlokam 10)
அர்தம் : தாமஸனுக்கு ப்ரியமான போஜனம் ..
தமோ குணீக்கு , தாமஸனுக்கு ப்ரிய போஜனம் எத்தகையது ??
யாதயாமம் . ஒரு ஜாமத்தைத் தாண்டி பழையது . பழைய உணவு புளித்துப் போகும். Ferment ஆகும் .. புளித்துப் போன உணவு புத்தியை மந்தம் ஆக்கும் .. என் சிறு வயஸில் வீட்டில் இட்லீ , தோஸை அரிதாக , நான்கைந்து மாஸத்திற்கு ஒரு முறையே செய்வார்கள் .. அடை உண்டு .. பொங்கல் அடிக்கடி உண்டு .. ஸேவை உண்டு .. உப்புமா உண்டு .. இவை எல்லாம் Fresh உணவு .. இட்லீ , தோஸை கிடையாது .. முதல் நாளே மாவை அரைத்து , புளிக்க வைக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும் .. இன்று பல வீடுகளில் தினம் தினம் இட்லீ தோஸை தான் .. க்ரைண்டர் , மிக்ஸி , ஃப்ரிட்ஜ் போன்ற கருவிகள் மூலம் வஸதி பெருகி காரணமாக இருக்கலாம் .. செய்வதற்கு ஸுலபமாக இருக்கிறது என்பதாலும் இருக்கலாம் .. வட பாரதத்தில் ரொட்டி சாப்பிடும் வீடுகளில் ரொட்டி செய்யச் செய்ய சூடாக , Freshஆகத் தட்டில் பரிமாறுவார்கள் .. நேரடியாக அடுப்பில் இருந்து தட்டிற்கு .. செய்து வைக்கும் பழக்கம் கிடையாது .. தென் ஆஃப்ரிக்காவில் வீடுகளில் ஒரு வாரத்திற்கு கறியும் , ஸாதமும் , ரொட்டியும் செய்து ஃப்ரீஜரில் வைத்து விடும் பழக்கத்தைப் பார்த்தேன் .. (தாமஸ குணத்திற்கு மற்றொரு தன்மை உண்டு .. சோம்பல் ..)

கதரஸம் .. ரஸம் அற்றுப் போன உணவு .. காய்ந்து வறண்டு போன உணவு வகைகள் .. ருசியை இழந்த உணவு ..
பூதி .. அழுகி , நாற்றத்துடன் கூடிய உணவு ..
பர்யூஷிதம் .. கலப்பட உணவு , கெட்டுப் போன உணவு ..
உச்சிஷ்டம் .. எச்சில் உணவு .. சிறு குழந்தையின் எச்சில் தவிர மற்ற எச்சில் உணவுகள் அனைத்தும் தவிர்க்கப் பட வேண்டியவை .. எச்சில் மிக அதிகமாகப் புழங்கும் இடம் சாராயக் கடை ..
அமேத்யம் .. தூய்மை அற்ற உணவு ..
சாராயம் , மாம்ஸ உணவு , தூய்மை அற்ற சூழ்நிலையில் தூய்மை அற்றுத் தயாராகும் உணவு .. இவை தாமஸனுக்கு ப்ரியமானவை ..
தாமஸன் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை .. அதனால் ஸ்ரீ க்ருஷ்ணன் இத்தகைய உணவு வகைகளின் விளைவுகளைக் குறிப்பிடவில்லை ..
Comments
Post a Comment