ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 243
वाङ्मयं तप .. (अध्याय १७ - श्लोक १५)
வாங்மயம் தப .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 15)
Vaan(g)mayam Tapa .. (Chapter 17 - Shlokam 15)
அர்தம் : இந்த தபஸ் வாக்கினால் ஆகும் தபஸ் ஆகும் ..
வாக்கினால் இயம்பக் கூடிய தபஸைப் பற்றி இங்கு பேசுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ரெண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார் .. 1) அநுத்வேக கரம் வாக்யம் .. 2) ஸ்வாத்யாய அப்யாஸம் ..
1) அநுத்வேக கரம் வாக்யம் .. உத்வேகம் இல்லாது பேசுதல் .. ஆவேஶம் இல்லாமல் பேசுதல் .. பிறரை உத்வேகப் படுத்தும் வகையில் , தூண்டி விடும் வகையில் பேசாது இருத்தல் .. குரலை உயர்த்தாமல் , முகத்தைக் கடுகடுப்பாக்காமல் , தொண்டை நரம்புகள் புடைக்காமல் பேசுதல் .. ஸ்ரீ க்ருஷ்ணன் இத்துடன் 'ஸத்யம் ப்ரிய ஹிதம்' என்ற மூன்று விஷயங்களை இணைக்கிறார் .. உத்வேகம் இல்லாமல் , உத்வேகம் அளிக்காமல் பேசுதல் ஆனால் ஸத்யத்தைப் பேசுதல் , ப்ரியமாக அன்புடன் பேசுதல் மற்றும் ஹிதம் பேணும் வகையில் , நலன் பேணும் வகையில் பேசுதல் .. இது வாக்கினால் செய்யப் படும் தபஸ் .. இதுவே வேதத்தின் ஆக்ஞையும் ஆகும் .. "ஸத்யம் ப்ரூயாத் .. ப்ரியம் ப்ரூயாத் .. நா ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம் .." அதாவது , "ஸத்யம் பேசு .. அதை ப்ரியமாகப் பேசு .. அப்ரியமான (கசப்பான) ஸத்யத்தைப் பேசாதே .."
2) ஸ்வாத்யாயம் .. ஸ்வாத்யாயம் ஒரு அப்யாஸம் .. பயிற்சி .. தினம் தினம் படித்தல் .. நல்ல புஸ்தகங்களைப் படித்தல் .. தன்னை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்துடன் படித்தல் .. ஸ்வாத்யாயம் அதாவது தன்னை , ஸ்வயத்தை அறிந்து விடும் நோக்கத்துடன் படித்தல் .. தினம் தினம் படித்தல் .. வாக்கினால் செய்யப் படும் தபஸ் ..

Comments
Post a Comment