ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 244
तपः मानसम् .. (अध्याय १७ - श्लोक १६)
தபஹ மானஸம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 16)
Tapah Maanasam .. (Chapter 17 - Shlokam 16)
அர்தம் : இந்த தபஸ் மனஸினால் ஆகும் தபஸ் ஆகும் ..
மனஸால் ஆற்றக்கூடிய தபஸை விளக்கும் போது , "(1) மனஹ ப்ரஸாதஹ , (2) ஸௌம்யத்வம் , (3) மௌனம் , (4) ஆத்ம விநிக்ரஹ , (5) பாவ ஸம்ஶுத்திஹி
என்று ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
(1) மனஹ ப்ரஸாதஹ .. ப்ரஸாதம் என்றால் மகிழ்ச்சி .. ஸந்தோஷம் .. தோஷம் அதாவது த்ருப்தி இருந்தால் தான் ஸந்தோஷம் அதாவது மகிழ்ச்சி இருக்கும் .. மனஸில் குறை இருந்தால் மகிழ்ச்சி இருக்க முடியாது .. து:கமே இருந்திடும் .. த்ருப்தி இல்லாமல் உலக விஷயங்களின் பின்னால் அலைந்திடும் மனஸ் அமைதியை இழந்து விடும் .. நிறைவான மனஸே அமைதியாக இருந்திடும் .. ஆனந்தமாக இருந்திடும் .. மனஸின் நிறைவு தான் , பூர்ண த்ருப்தியே மனஹ ப்ரஸாதஹ ..
(2) ஸௌம்யத்வம் .. அழகு .. மனஸில் நிலைக்கும் ஸத் பாவனைகள் , நல்ல பாவனைகளே மனஸின் அழகு .. ஹிம்ஸை (வன்முறை) , க்ரூரம் , வக்ரம் (கோணல்) , த்வேஷம் (வெறுப்பு) , பொறாமை அதாவது பொறுமை இன்மை ஆகிய பாவங்கள் மனஸின் அழகிற்கு பங்கம் .. இவை இல்லாத நிலை மனஸின் ஸௌம்யத்வம் , அழகு .. நேர்மாறாக , அஹிம்ஸை , தயை , அன்பு , நேர்மை , எளிமை , பொறுமை ஆகிய பாவனைகள் இருந்தால் மனஸின் ஸௌம்யத்வம் ... அழகு ..
(3) மௌனம் .. அலைகள் இல்லாத , சலனம் இல்லாத மனஸ் .. அநுகூலம் - ப்ரதிகூலம் , உறவு - பிரிவு , விருப்பு - வெறுப்பு , ஸுகம் - து:கம் போன்ற இருமைகளால் , ரெட்டைகளால் பாதிக்கப் படாத நிலை மனஸின் மௌன நிலை .. உயர்ந்த சிந்தனைகள் மனஸில் மௌனத்தை நிலைக்கச் செய்யும் ..
(4) ஆத்ம விநிக்ரஹ (மன அடக்கம்) .. தன் இஷ்டத்திற்கு அலைய விடாமல் , இந்த்ரிய விஷயங்களுக்குப் பின்னால் அலைய விடாமல் மனஸை நாம் நிஶ்சயித்த விஷயத்தில் லயிக்கச் செய்வதே ஆத்ம விநிக்ரஹம் ..
(5) பாவ ஸம்ஶுத்தி அதாவது மனத்தூய்மை .. தூய எண்ணமே பாவ ஸம்ஶுத்தி .. ஸ்வயநலமும் தற்பெருமையும் இல்லை என்றால் மனஸ் ஶுத்தமாகும் ..
இவை அனைத்தும் மனஸால் ஆற்றப் படும் தபஸ் ஆகும் ..

Comments
Post a Comment