ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 248
तद्दानं सात्त्विकम् .. (अध्याय १७ - श्लोक २०)
தத்தானம் ஸாத்விகம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 20)
Taddaanam Sattvikam .. (Chapter 17 - Shlokam 20)
அர்தம் : அது ஸாத்வீகனின் தானம் ஆகும் ..
தானத்தைப் பற்றி இங்கு பேசுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஸாத்வீகனின் தானம் எவ்வாறு இருந்திடும் ??
தாதவ்யம் இது .. வ்யம் என்ற வார்தைத் தொகுப்பு கலந்தால் தகுந்தது , உகந்தது .. என்று அர்தம் .. தா என்றால் கொடுத்தல் .. தாதவ்யம் என்றால் கொடுக்கப் பட வேண்டியது .. கொடுத்தல் தகுந்தது என்று அர்தம் .. கர் , க்ரு என்றால் செய்தல் .. கர்தவ்யம் என்றால் செய்யத் தகுந்தது .. க என்றால் செல்லுதல் .. கந்தவ்யம் என்றால் சென்று அடைய வேண்டிய லக்ஷ்யம் ..
இது கொடுக்கப் பட வேண்டியது .. இதைக் கொடுத்தல் அவஶ்யம் என்று உணர்ந்தால் ஸாத்வீகன் தானம் செய்திடுவான் .. வேறு எந்த உந்துதலும் அவனுக்கு அவஶ்யம் இல்லை ..
தானத்தின் ஃபலன்கள் பாராட்டு , நன்றி உணர்வு , தனக்கு அவஶ்யம் ஏற்படும் போது மறு உதவி பெறுதல் .. ஆகியவை .. அநுபகாரிணே என்றால் ப்ரதி உபகாரம் செய்ய இயலாதவன் .. அத்தகையவனுக்கு தானம் செய்தல் .. அறிமுகம் இல்லாதவனுக்கு தானம் செய்தல் .. கொடுப்பவன் யார் என்பது அறியப் படுத்தாமல் கொடுப்பது .. புத்தி ஸ்வாதீனம் இல்லாதவருக்கோ , நினைவில் வைத்துக் கொள்ள முடியாதோருக்கோ , வயோதிகருக்கோ , நோய் அல்லது விபத்து காரணமாக மயக்க நிலையில் இருப்பவருக்கோ தானம் அளிப்பது .. இது ஸாத்வீகனின் இயல்பு .. வலது கையால் கொடுப்பதை இடது காய் அறியாது என்பார்களே , அவ்வாறு அளித்தால் ..
தேஶம் , காலம் மற்றும் பாத்ரம் அறிந்து தானம் செய்வான் ஸாத்வீகன் .. இந்த இடத்திற்கு , இந்த காலத்தில் , இந்த நபருக்கு உகந்ததா , நன்மை செய்யுமா என்று சிந்தித்து தானம் செய்வான் ஸாத்வீகன் ..

Comments
Post a Comment