ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 251
ॐ तत् सत् ... (अध्याय १७ - श्लोक २३)
ஓம் தத் ஸத் ... (அத்யாயம் 17 - ஶ்லோகம் 23)
Om Tat Sat ... (Chapter 17 - Shloka 23)
அர்தம் : ஓம் தத் ஸத் ... ஸ்ரீ பரப்ரஹ்ம பரமாத்மாவின் ஶப்த ஸ்வரூபம் ...
ஓம் என்பது ப்ரணவ மந்த்ரம் .. ஏகாக்ஷர மந்த்ரம் (ஒரு அக்ஷரம்) ... ஸ்ரீ க்ருஷ்ணன் பத்தாவது அத்யாயமான விபூதி யோகத்தில் , "கிராமஸ்மி ஏகமக்ஷரம்" என்கிறார் .. "ஏகாக்ஷர மந்த்ரத்தில் என்னைப் பார்க்கலாம்" என்கிறார் .. ஸ்ரீ பரமாத்மனின் ஶப்த ரூப வெளிப்பாடு ப்ரணவ மந்த்ரம் .. நிர்குண நிராகார பரம்பொருள் ஓம் என்னும் மந்த்ரம் மூலம் வெளிப்படுகிறார் .. த்யானம் செய்திட ஓம் ஒரு ஸுலபமானக் கருவி ..
மற்றொரு ஸந்தர்பத்தில் , "அந்திம க்ஷணத்தில் , ஶரீரத்தில் இருந்து உயிர்ப் பிரியும் அந்த க்ஷணத்தில் ஓம் என்ற மந்த்ரத்தில் த்யானம் செய்பவன் என்னை அடைகிறான்" என்று கூறுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஓம் என்ற மந்த்ர உச்சரிப்பு மூலையில் பல்வேறு ஸூக்ஷ்மமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர் .. ப்ரணவ மந்த்ர உச்சரிப்பு ஶ்வாஸ ப்ரஶ்னைகள் போன்ற சில ஶரீர உபாதைகளையும் சீர் செய்கிறது .. மனஸை அமைதி அடையச் செய்கிறது ..
அ , உ , ம் என்ற மூன்று ஶப்தங்களின் தொகுப்பே ஓம் .. 'அ' வின் உச்சரிப்பு அடி வயிற்றில் இருந்தும் , 'உ'வின் உச்சரிப்பு தொண்டையில் இருந்தும் , 'ம்'ன் உச்சரிப்பு உதட்டில் இருந்தும் வருகின்றன .. இவ்வாறு ஓம் என்ற மந்த்ரம் நம் குரல் அமைப்பு முழுவதையும் உபயோகப் படுத்தி உச்சரிக்கப் படுகிறது ..
ஓம் என்ற மந்த்ரத்தை உச்சரித்து தெய்வீகக் கார்யங்களை , வைதீகக் கர்மங்களை ஆரம்பித்திடும் வழக்கம் உள்ளது .. வேதத்தின் ஸாரம் ஓம் ..
ஸபைகளில் வைக்கப் படும் தீர்மானங்களுக்கு நம் பாரம்பர்யத்தில் ஓம் என்ற உச்சரிப்புடன் ஒப்புதல் அளிக்கப் படுகிறது .. பாராட்டுதலை தெரிவிப்பதற்கும் ஓம் என்ற மந்த்ரம் சொல்லப் படுகிறது ..
ஸீக்கியர்கள் 'ஏக் ஓம்காரம்' என்கின்றனர் .. ஜைனர்கள் தம் ஐந்து மஹாவாக்யங்களில் ஓம் உண்டு .. புத்த மதத்திலும் ஓம் உண்டு .. இவ்வாறு , ஓம் என்ற மந்த்ரம் ஒரு விஶ்வ மந்த்ரம் ..
தத் என்பது அது .. இந்த உலகம் இதம் .. அவன் தத் .. அவனை நினைப்பதற்கு தத் என்ற ஶப்தம் உபயோகப் படுகிறது .. செயல்களை அவனுக்காகச் செய்வது மற்றும் தன்னை அவனுடன் ஐக்யப் படுத்துதல் என்ற நோக்கத்தில் தத் உச்சரிக்கப் படுகிறது .. படைப்பில் அனைத்தும் அவனுடையவை .. இந்த ஶரீரம் , இந்த்ரியங்கள் , மனஸ் , புத்தி , எல்லாம் அவனுடையவை .. யக்ஞம் , தானம் , தபஸ் , ஜபம் , த்யானம் போன்ற கர்மங்களை அவனுக்காகச் செய்தலே உசிதம் .. தத் உச்சரிப்பு , அவனது நினைவு .. கார்யங்களை அவனுக்காகச் செய்தல் ..
ஸத் என்பது ஸத்யம் .. ஒரே ஸத்யம் .. மற்ற அனைத்தும் மாயை .. இருப்பது போல தோற்றம் அளிக்கும் .. ஆனால் இருக்காது .. நித்யம் அழிந்து கொண்டிருக்கும் .. அவன் மாத்ரமே , ஸ்ரீ பரமன் மாத்ரமே இருக்கிறார் .. நித்யம் ஆனவர் .. யக்ஞம் , தானம் , தபஸ் , ஜபம் , போன்ற கர்மங்கள் அவனே .. இக்கர்மங்களின் நோக்கமும் அவனே .. அவனை அடைவதே .. இந்த கர்மங்கள் ஸத் - கர்மங்கள் ஆகும் .. அவனை நோக்கி அழைத்துச் செல்லும் கர்மங்கள் .. அதே போல , ஸத் - புருஷன் , ஸத் - ஸங்கம் , ஸத் - விசாரம் , ஸத் - நிஷ்டை , ஸத் - பாவனை .. என்று பல ஸந்தர்பங்களிலும் ஸத் உபயோகம் ஆகிறது .. இவை அனைத்தும் ஸ்ரீ பரமனை நினைவு படுத்தக் கூடியவை .. அவனை நோக்கி ப்ரயாணம் செய்ய நம்மைத் தூண்டுபவை .. ஸத் மேலோங்கிய புருஷன் ஸத் - புருஷன் .. நல்லோரின் கூட்டம் ஸத் - ஸங்கம் .. தூய்மையான எண்ணங்கள் ஸத் விசாரம் .. கருணை , அன்பு போன்ற பாவனைகள் ஸத் - பாவனை .. கங்கை , தீர்தம் போன்று உயர்த்தும் விஷயங்களில் நிஷ்டை ஸத் - நிஷ்டை ..
'ஓம் தத் ஸத்' ஒரு மந்த்ரம் ஆகும் .. ஸ்ரீ தோதாபுரி மஹராஜ் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸருக்கு நிர்விகல்ப ஸமாதியின் தீக்ஷை அளித்த போது , அவர் காதுகளில் இதே மந்த்ரத்தை ஓதினார் ..
Comments
Post a Comment