ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 252
काम्यानां कर्मणां न्यासं सन्न्यासम् । (अध्याय १८ - श्लोक २)
காம்யானாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் - (அத்யாயம் 18 - ஶ்லோகம் 2)
Kaamyaanaam Karmanaam Nyaasam Sannyaasam ... (Chapter 18 - Shlokam 2)
அர்தம் : காமத்துடன் கூடிய , விருப்பங்களுடன் இணைந்த கர்மங்களை துறப்பதே ஸந்ந்யாஸம் ...
ஹிந்து தர்மத்தின் அங்கமான ஆஶ்ரம அமைப்பின் ஒரு அம்ஶம் தான் ஸந்ந்யாஸம் .. உலக வாழ்க்கையின் அந்திம காலத்தில் , முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து விட்ட பிறகு , உலகத்தில் இருந்து வெளியேறிட , இல்லை , வெளியேற்றத்திற்குத் தயார் செய்திட , ஒரு அழகான அமைப்பு .. உலக வாழ்க்கை என்றாலே பலப்பலக் கார்யங்களின் தொகுப்பு .. உலக வாழ்க்கையைத் துறந்து ஸந்ந்யாஸத்தில் புகுதல் என்றால் கார்யங்களைத் துறந்து விடுதல் என்று அர்தம் கொள்ளுதல் ஸஹஜம் .. அனைத்துக் கார்யங்களையும் துறந்து , ஒன்றும் செய்யாமல் இருத்தல் என்பது இயலாத ஒன்று .. ஶரீரத்தில் பலம் இருந்தால் , ஏதேனும் செயல் புரிவதற்கான தூண்டுதல் அதிகம் ஆகி விடும் .. ஶரீரத்தில் பலம் இல்லா விட்டாலும் , அவரை மதிக்கிற மநுஷ்யர்கள் , தம்மை அவரது ஶிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்கள் , அருகில் இருந்தால் , ஆலோசனை சொல்வது தொடரும் .. செயல்களில் இருந்து விடுபடுதல் மிகக் கஷ்டமான ஒன்று .. செயல்களைத் துறக்காமல் , அவற்றின் பின்னால் உள்ள விருப்பங்களை , 'ஸ்வந்த - அஜெண்டாவை (agenda)' துறந்து விடுதலே ஸந்ந்யாஸம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
இன்று ஸந்ந்யாஸிகள் தம்மை க்றிஸ்தவப் பாதிரிகளுடன் ஒப்பிட்டுக் கொண்டு , அவர்களைப் போல ஆஸ்பத்திரிகளும் வித்யாலயங்களும் ஹாஸ்டல்களும் இஞ்ஜினியரிங் கல்லூரிகளும் நடத்துவதில் முனைந்து விட்டனர் .. அதனால் பேங்க் கணக்குகள் , ராஜாங்க அலுவலகங்கள் , அதிகாரிகள் , லஞ்ஜம் , வரி ஸம்பந்தமான சர்சைகள் , நீதிமன்ற வழக்குகள் , பத்ரிகைகளில் அவஶ்யமற்ற சர்சைகள் , அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் என்ற அனைத்தாலும் சூழப்பட்டு வாழ்கின்றனர் .. சொத்துச் சண்டைகள் , கோஷ்டிப் பூசல்கள் போன்றவையும் ஸந்ந்யாஸிகளை விட்டு வைக்கவில்லை ..
யோகம் , வேதம் , ஆயுர்வேதம் , வேதாந்தம் , பகவத் கீதை , தேவாரம் - திருவாசகம் - ப்ரபந்தம் , தர்ம ஶாஸ்த்ரம் , ஆகமம் , ஸங்கீதம் , ஜ்யோதிஷ ஶாஸ்தரம் , ஶில்ப ஶாஸ்த்ரம் , ஸம்ப்ரதாய பஜனை போன்றவை தர்மம் ஸம்பந்தமான விஷயங்கள் .. ஸந்ந்யாஸிகள் இவ்விஷயங்களில் வித்யாலயங்களும் ஹாஸ்டல்களும் நடத்தினால் சிறப்பாக இருக்கும் அல்லவா !! ஹிந்து தர்மத்தின் காவலாளர்கள் உருவாவார்கள் அல்லவா !! ஆங்க்ல வழி வித்யாலயங்களும் கல்லூரிகளும் நடத்தி , அமெரிக்க யஜமானர்களுக்கும் , பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வேலை ஆட்களைத் தயார் செய்கிறோமே அன்றி , தர்மத்தின் மீது ஶ்ரத்தை உள்ள சேவகர்கள் உருவாவதில்லை .. வ்யாபாரிகளும் அரஸாங்கமும் அதைச் செய்யட்டும் .. அது ஸந்ந்யாஸிகளின் வேலை இல்லை .. இன்று ஸ்ரீ ராமதேவ் பாபா யோகம் என்ற ஒரே விஷயத்திற்காக ஹ்ருஷீகேஶில் மிகப் பெரிய பயிற்சி அகம் நடத்துகிறார் .. ஆயுர்வேத ஆராய்ச்சி கேந்த்ரமும் கல்லூரியும் நடத்துகிறார் .. ஶங்கர மடம் வேத பாடஶாலைகள் நடத்துகிறது .. காஞ்சி மடம் நம் தேஶம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட பாடஶாலைகள் நடத்துகிறது .. ஸந்ந்யாஸிகள் செய்ய வேண்டியது இதுதான் .. அதையும் க்ரஹஸ்தர்கள் நிர்வாஹம் செய்ய வேண்டும் ...

Comments
Post a Comment