ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 253
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् (अध्याय १८ - श्लोक ५)
யக்ஞஹ தானம் தபஶ்சைவ பாவனானி மனீஷிணாம் ,, (அத்யாயம் 18 - ஶ்லோகம் 5)
Yagyo Daanam Tapashchaiva Paavanaani Maneeshinaam .. (Chapter 18 - Shlokam 5)
அர்தம் : யக்ஞம் , தானம் மற்றும் தபஸ் மநுஷ்யனை புநிதமாக்குகின்றன ..
யக்ஞம் என்பது அந்யரின் நலன் நாடி தியாகம் செய்வது .. யக்ஞம் என்பதற்கு ஆங்க்லத்தில் "Sacrifice" என்கிறார்கள் .. ஸ்வயநல நோக்கம் ஏதும் இல்லாமல் பொது நலனில் , உலக நலனில் த்யாகம் செய்வதை யக்ஞம் எனலாம் .. வெளிப்படையாக நெய் , அன்னம் போன்ற ஆஹுதிகளையும் மற்ற வஸ்துக்களையும் அக்னியில் போட்டு பஸ்மம் ஆக்குதலை யக்ஞம் என்போம் .. த்யாக பாவனையை வளர்ப்பதே நோக்கம் .. த்யாக பாவனை அஹங்காரம் - மமதை என்ற அழுக்குகளை நீக்கி , நம் மனஸைப் புநிதம் ஆக்குகிறது ..
நமக்கு உபயோகப் படக்கூடிய பொருட்களை தேவைப் படுவோருக்குக் கொடுத்தலே தானம் .. தானம் நம் மனஸின் சேகரிக்கக் கூடிய தன்மையை அழித்து 'அபரிக்ரஹம்' என்ற தெய்வீக பாவனையை வளர்த்து விடுகிறது .. மனஸை புநிதம் ஆக்குகிறது ..
ஆகர்ஷணங்களுக்கு பலியாகி விடாமல் , இடர்கள் முன் தளர்ந்து விடாமல் , வெற்றி - தோல்வி என்னும் மோஹங்களில் சிக்கி விடாமல் , எடுத்த கார்யத்தில் தொடர்ந்து ஈடுபடுதலைத் தபஸ் எனலாம் .. தபஸ் விஷய போகம் என்னும் ஸுகங்களுக்குப் பின்னால் அலைந்திடும் நம் மனஸை ஸ்திரப் படுத்தி , மன உறுதியை அதிகப் படுத்திடும் .. இவ்வகையில் தபஸ் நம்மை புநிதன் ஆக்குகிறது . இம்மூன்று கர்மங்களைத் தவிர்த்தல் ஆகாது .. இடையறாது செய்திட வேண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
Comments
Post a Comment