ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 254
मोहात्तस्य परित्यागः - तामस त्याग .. (अध्याय १८ - श्लोक ७)
மோஹாத்தஸ்ய பரித்யாகஹ - இது தாமஸ த்யாகம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 7)
Mohaat Tasya Parityaagah - This is Taamasa Sacrifice .. (Chapter 18 - Shlokam 7)
அர்தம் : மோஹத்தின் வஶமான நிலையில் செய்யப்படும் த்யாகம் தாமஸ த்யாகம் ஆகும் ..
தாமஸம் அல்லது தமோ குணத்தை ப்ரதானமாகக் கொண்டவன் அக்ஞானம் காரணமாகவும் சோம்பல் காரணமாகவும் செய்ய வேண்டிய கர்மங்களை செய்யாமல் விடுகிறான் .. செய்ய வேண்டிய கர்மம் எது என்பதை அறிவதில்லை .. தாமஸனிடம் இயற்கையாக நிறைந்து உள்ள வறட்டுப் பிடிவாதம் காரணமாக , பிறர் எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டான் .. செய்ய வேண்டியது எது என்று அறிந்திருந்தாலும் சோம்பல் செய்ய விடாமல் அவனைத் தடுத்திடும் .. இவ்வாறு மோஹ வஶமாகி , கர்மங்கள் த்யாகம் செய்யப் படுவதை தாமஸ த்யாகம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
Comments
Post a Comment