ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 255
दुःखमित्येव कायक्लेशभयात् त्यजेत् - राजस त्याग .. (अध्याय १८ - श्लोक ८)
து:கமித்யேவ காயக்லேஶ பயாத் த்யஜேத் - இது ராஜஸ த்யாகம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 8)
Dukhamityeva kaaya klesha bhayaat Tyajet - This is Rajasa Sacrifice .. (Chapter 18 - Shlokam 8)
அர்தம் : இது கஷ்டம் அளிக்கிறது என்பதாலோ ஶரீரத்திற்கு வேதனை அளிக்கிறது என்பதாலோ கார்யங்களை செய்யாமல் விடுதல் ராஜஸ த்யாகம் ..
ப்ரதானமாக ராஜஸ குணம் கொண்டவன் பரபரப்பாகச் செயல்களில் ஈடுபடுபவனே .. எனினும் , எது செய்யத் தகுந்ததோ அதையே செய்வான் என்பது நிஶ்சயம் இல்லை .. கூடவே , அச்செயல்களில் இருந்து விளையக்கூடிய ஃபலன்களின் மீது தீவ்ரப் பற்றும் கொண்டவன் .. உகந்தச் செயல் இல்லை .. ஆனால் , மனஸை கவர்ந்து இழுக்கக் கூடிய ஃபலன்கள் கிடைக்கும் என்று தோன்றினால் , அதைச் செய்வான் .. மற்ற பக்கம் உகந்தச் செயலாக இருந்தாலும் , செய்யத் தகுந்தது என்று ராஜஸனுக்குத் தோன்றினாலும் , அச்செயலைச் செய்வதில் ஶரீரத்திற்க்குக் கஷ்டம் இருந்தால் , அதில் இருந்து விளையக் கூடிய ஃபலன் விஶேஷமானது இல்லை என்று தோன்றினால் , பய வஶமாகி அச்செயலை த்யாகம் செய்து விடுவான் ராஜஸி .. இவ்வகை த்யாகத்தை ராஜஸ த்யாகம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
யக்ஞத்தில் , யக்ஞப் புகை சூழ உட்காருதல் உடலுக்குக் கஷ்டம் அளிக்கிறது என்று கருதுவதால் , யக்ஞம் செய்ய மறுக்கிறான் ராஜஸி அல்லது புரோஹிதரிடம் ஶீக்ரமாக முடித்து விடக் கோருகிறான் ..
யக்ஞத்தில் , யக்ஞப் புகை சூழ உட்காருதல் உடலுக்குக் கஷ்டம் அளிக்கிறது என்று கருதுவதால் , யக்ஞம் செய்ய மறுக்கிறான் ராஜஸி அல்லது புரோஹிதரிடம் ஶீக்ரமாக முடித்து விடக் கோருகிறான் ..
Comments
Post a Comment