ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 257
न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते .. (अध्याय १८ - श्लोक १०)
ந த்வேஷ்ட்யகுஶலம் கர்ம குஶலே நானுஷஜ்ஜதே .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 10)
Na Dweshtyakushalam Karma kushale Naanushajjate ... (Chapter 18 - Shloka 10)
அர்தம் : மனஸ் விரும்பாத கார்யங்களை அவன் வெறுப்பது இல்லை .. மனஸிற்குப் பிடித்த கர்மங்களை அவன் நாடுவதும் இல்லை ..
ஸாத்வீகன் கர்ம ஃபலன் மீது பற்று வைப்பதில்லை என்பது புரிகிறது .. கர்மத்தின் மீது பற்று வைக்காமல் இருப்பது என்றால் என்ன ?? இங்கு விளக்குகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. மனஸ் விரும்பாத கர்மங்களை வெறுப்பதில்லை .. தன் தகுதிக்கு ஏற்ற கர்மம் இல்லை என்று நினைப்பதாலும் , தான் ஈடுபட்டிருக்கும் கர்மங்களால் ஸமுதாயத்தில் தனக்கு உரிய அந்தஸ்தும் மதிப்பு - மர்யாதையும் கிடைக்கவில்லை என்று கருதுவதாலும் , தனக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை "தர்ம ஸங்கடமாக" , ஸ்வந்த அளவுகோலில் தவறு என்று கருதுவதாலும் மனஸ் அதை விரும்புவதில்லை .. ஆயினும் , அத்தகைய கர்மத்தை வெறுப்பதில்லை ஸாத்வீகன் .. அதே போல , மனஸிற்கு இஷ்டமான கார்யங்களை நாடுவதும் இல்லை .. இத்தகைய மனப்பான்மை எங்ஙனம் ஸாத்யம் ஆகும் ?? கர்தவ்ய பாவனை , கடமை என்ற பார்வையுடன் செய்தால் இது ஸாத்யம் ஆகும் ..
Comments
Post a Comment