ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 259
अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् .. (अध्याय १८ - श्लोक १२)
அநிஷ்டமிஷ்டம் மிஶ்ரம் ச த்ரிவிதம் கர்மணஹ் ஃபலம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 12)
Anishtamishtam Mishram Cha Trividham Karmanah Phalam .. (Chapter 18 - Shloka 12)
அர்தம் : கர்மங்களுக்கு மூன்று விதமான ஃபலன்கள் உண்டு .. இஷ்டமானவை , இஷ்டம் அல்லாதவை , ரெண்டும் கலந்தவை ..
ஒவ்வொரு கர்மமும் நிஶ்சயம் ஃபலன் அளித்திடும் .. Every action has a reaction .. ஃபலன் நம் விருப்பத்திற்கு ஏற்ப , நாம் இஷ்டப் பட்டது போல இருக்கலாம் .. நம் விருப்பத்திற்கு மாறாக இருக்கலாம் .. அல்லது கலந்தும் இருக்கலாம் .. ஃபலன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் கல்பனை செய்து கொள்ளலாம் .. அதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய முடியாது .. ஃபலன் எவ்வாறு அமைந்திடும் என்பது நம் கையில் இல்லை .. ஃபலனை பல்வேறு ஶக்திகள் சேர்ந்து படைக்கின்றன .. இந்த ஃபலன்கள் கிடைத்தே தீரும் , இந்த ஜன்மத்திலே கிடைக்கலாம் .. வரும் ஜன்மங்களில் கிடைக்கலாம் .. கர்மஃபலன் மீது பற்று வைத்தவனுக்கே இந்த நியமம் பொருந்தும் ..
ஃபலன் மீது பற்றே வைக்காதவன் , அது இஷ்டமானதா , இஷ்டம் அல்லாததா என்பதைப் பதிவும் செய்து கொள்வதில்லை .. கர்மம் அவனுக்கும் ஃபலன் தரும் என்றாலும் , அவன் பாதிக்கப் படுவதில்லை .. அவன் பந்தப் படுவதில்லை ..
ஃபலன் மீது பற்றே வைக்காதவன் , அது இஷ்டமானதா , இஷ்டம் அல்லாததா என்பதைப் பதிவும் செய்து கொள்வதில்லை .. கர்மம் அவனுக்கும் ஃபலன் தரும் என்றாலும் , அவன் பாதிக்கப் படுவதில்லை .. அவன் பந்தப் படுவதில்லை ..
Comments
Post a Comment