ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 260
अधिष्ठानं कर्ता करणं चेष्टा दैव पञ्चैतानि कारणानि .. (अध्याय १८ - श्लोक १३ , १४)
அதிஷ்டானம் கர்தா கரணம் சேஷ்டா தைவம் பஞ்சைதானி காரணானி .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 13 , 14)
Adhishthaanam Kartaa Karanam Cheshtaa Dhaivam Panchaitaani Kaaranaani .. (Chapter 18 - Shloka 13 , 14)
அர்தம் : ஶரீரம் , செய்பவன் , உபகரணங்கள் (இந்த்ரியங்கள்) , பல்வித முயற்சிகள் மற்றும் தெய்வம் .. கர்மங்களுக்கு இவை ஐந்து காரணங்கள் ..
கர்மங்கள் நடந்திட ஐந்து காரணங்கள் அவஶ்யம் .. அதிஷ்டானம் .. அடிப்படை / ஆதாரம் .. ஶரீரம் .. உடல் இல்லாத நிலையில் கர்மங்கள் செய்ய இயலாது .. பூலோக வாழ்க்கையில் இருந்திடும் வரைதான் கர்மங்கள் நடந்திடும் .. கர்தா ... செய்பவன் .. உடலில் இருந்து இயங்கிடும் ஒருவன் , நான் செய்கிறேன் அல்லது நானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவன் கர்தா .. கரணம் .. உபகரணங்கள் / கருவிகள் .. இந்த்ரியங்களே உபகரணங்கள் .. கர்மங்களைச் செய்திட கர்தாவிற்குக் கிடைத்திருக்கும் கருவிகள் .. சேஷ்டா .. இவற்றை வைத்து கர்தாவால் செய்யப் படும் வித வித முயற்சிகள் சேஷ்டா .. தெய்வம் .. தெய்வம் துணை நின்றால் நடந்திடும் ..
இது அனைத்து கார்யங்களுக்கும் பொருந்திடும் .. "பசிக்கிறது .. பசியை ஆற்ற மரத்தில் பழுத்துத் தொங்கும் மாம்பழத்தைப் பறித்துத் தின்ன வேண்டும் என்பது ஆதாரம் அல்லது அதிஷ்டானம் .. யாருக்குப் பசி இருக்கிறதோ அவன் கர்தா .. அவனது கைகள் , கால்கள் , கண் , மூங்கில் , கயிறு , கத்தி , கல் , ஆகியவை கரணங்கள் / கருவிகள் .. குதித்து பழத்தைப் பறிக்க முயலுதல் / மரம் ஏறி முயலுதல் / கல்லால் அடித்து பழத்தை விழ வைக்க முயற்சி / மூங்கிலால் தட்டி முயலுதல் , மூங்கில் உச்சியில் கத்தியைக் கட்டி பழத்தை மரத்தில் இருந்து அறுக்க முயலுதல் ஆகிய பலவும் சேஷ்டைகள் அல்லது முயற்சிகள் .. பழம் பறிக்கப் பட வேண்டும் , தின்னக் கூடிய நிலையில் இருக்க வேண்டும் , கைகளை அடைய வேண்டும் , தின்னப் பட வேண்டும் .. இவை தெய்வம் .. பறிக்க முடியாமல் போகலாம் .. பழம் அழுகியோ , வண்டு துளைத்ததாகவோ , காயாகவோ இருக்கலாம் .. பறித்த பழம் கையை அடைவதற்கு முன் வேறொருவன் அதை எடுத்துச் செல்லலாம் .. தெய்வம் அருளினால் பழம் தின்னப் படும் , பசியைப் போக்கும் ..
விக்ஞான ஆராய்ச்சியில் இதுவரை நடந்துள்ள ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் ஆதாரம் / அதிஷ்டானம் .. விக்ஞானியே கர்தா .. பரிஶோதனைக் கூடம் , அங்குள்ள கருவிகள் , ரஸாயனங்கள் ஆகியவை கரணம் .. ஆராய்ச்சியில் செய்யப் படும் பல்வேறு முயற்சிகள் சேஷ்டா .. தெய்வ அருள் .. ஆகிய ஐந்தும் அமைந்தால் ஆராய்ச்சி முன்னேறும் ..

Comments
Post a Comment