ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 261
सर्व भूतेषु येनैकं भावमव्ययम् अविभक्तं विभक्तेषु ईक्षते तज्ज्ञानं सात्विकम् ... (अध्याय १८ - श्लोक २०)
ஸர்வ பூதேஷு யேனைகம் பாவமவ்யயம் அவிபக்தம் விபக்தேஷு ஈக்ஷதே தஜ்ஞானம் ஸாத்விகம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 20)
Sarva Bhooteshu Yenaikam Bhaavamavyayam Avibhaktam Vibhakteshu Eekshate Tajgyaanam Saattvikam ... (Chapter 18 - Shlokam 20)
அர்தம் : எந்த க்ஞானம் அழியும் அனைத்து உயிர்களிலும் அழியா ஒரே பரம்பொருளைக் காண்கிறதோ , அது ஸாத்வீக க்ஞானம் ..
படைப்பில் அனைத்தும் த்ரிகுணங்களின் கலவை .. புத்தியின் துணையுடன் அறிதல் என்ற முயற்சிக்கு ஆதாரமானது க்ஞானம் .. க்ஞானமும் முக்குணங்களால் வகைப்படும் .. இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் ஸாத்வீக க்ஞானம் பற்றி சர்சை செய்கிறார் ..
ஸாத்வீகம் முழுமையைப் பார்க்கத் தூண்டுகிறது .. பன்மையே இயற்கையின் நியதி .. பல்வேறு நிறங்கள் .. பலப்பல ரூபங்கள் .. பல வித ஆற்றல்கள் .. எத்தனை ப்ராணிகளோ அத்தனை விதங்கள் .. இவை கவர்ச்சிகரமாகவும் உள்ளன .. வெளிப்படையாகத் தெரியும் இந்தப் பன்மையில் நாம் லயித்து விடும் வாய்ப்பு உண்டு .. ஸாத்வீக க்ஞானம் பன்மையின் பின்னணியில் இழைந்து ஓடும் ஒருமையைக் காணச் செய்யும் .. பல வர்ணங்களுக்குப் பின்னால் உள்ள வெண்மையைக் காணத் தூண்டும் .. பல ஆற்றல்கள் புறப் பார்வைக்குத் தெரிந்தாலும் அத்தனை ஆற்றல்களுக்கும் காரணமான ஒன்றைக் காண்பிக்கும் .. புறத்தில் மயங்கி விடாமல் அகத்தை நோக்கிப் பாய்ந்து அகத்தைக் கண்டிடும் ..
தித்திப்புப் பண்டங்கள் பல்வேறு வர்ணங்களில் , பல ரூபங்களில் வைக்கப் பட்டிருக்கும் .. வர்ண விளக்குகளில் கவர்ச்சிகரமாக அடுக்கப் பட்டிருக்கும் .. அந்யர் இந்தப் புறக் கவர்ச்சியில் மயங்கி , இவற்றை வெவ்வேறு பண்டங்களாகக் காண்பர் .. ஆயின் ஸாத்வீக க்ஞானம் இந்த புற வேறுபாடுகளுக்குப் பின்னால் , ஒரே மாவு , ஒரே ஶர்கரை , ஒரே நெய்யில் இவை அனைத்தும் செய்யப் பட்டுள்ளன என்ற ஸத்யத்தைக் கண்டிடும் ..

Comments
Post a Comment