ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 262
पृथक्त्वेन नानाभावान्पृथग्विधान वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं राजसम् ... (अध्याय १८ - श्लोक २१)
ப்ருதக்த்வேன நாநா பாவான்ப்ருதக்விதான் வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஞானம் ராஜஸம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 21)
Pruthaktvena NaanaaBhaavaan Pruthagvidhaan Vetti Sarveshu Bhooteshu Tajgyaanam Raajasam .. (Chapter 18 - Shlokam 21)
அர்தம் : எந்த க்ஞானம் உயிர்களை வெவ்வேறாக , பரஸ்பர ஸம்பந்தம் இல்லாதவையாகக் காண்கிறதோ , அது ராஜஸ க்ஞானம் ..
மேலெழுந்த பார்வை மற்றும் உள்ளார்ந்த பார்வை ... இதுதான் ரஜோ குணம் மற்றும் ஸத்வ குணத்தின் இடையில் உள்ள முக்ய வித்யாஸம் .. எது தெரிகிறதோ , எவ்வாறு தெரிகிறதோ அதை அப்படியே பார்ப்பது ராஜஸம் .. எது தெரிகிறதோ அதை அவ்வாறே பார்த்தாலும் , பின்னால் ஒளிந்து இருப்பதை , புதைந்து இருப்பதை , புறக் காக்ஷியில் புலப்படாததைக் காண்பது ஸாத்வீகம் .. ராஜஸம் இவ்வுலகத்தை தனித்தனியாக , ஒன்றுக்கொன்று ஸம்பந்தம் இல்லாதகாகக் காண்பதில் ஆஶ்சர்யம் எதுவும் இல்லை .. புறக் காக்ஷிக்கு படைப்பு வெவ்வேறாக , பரஸ்பர ஸம்பந்தம் இல்லாததாகவே தெரிகிறது .. பலப்பல வர்ணங்கள் , பலவித ரூபங்கள் , பல ஆற்றல்கள் என்று உலகம் பன்மை நிறைந்ததாகத் தெரிகிறது என்பதில் ஸந்தேஹம் இல்லை .. தெரிவதே ஸத்யமா ?? ஸ்ருஷ்டியின் பலப்பல ஜீவன்கள் இடையில் பரஸ்பர ஸம்பந்தம் ஏதும் இல்லையா ?? பன்மையின் பின்னணியில் இவற்றை ஒருங்கிணைக்கும் "ஒன்று" ஏதும் கிடையாதா ?? இத்தகைய கேள்விகளை எழுப்பி , அவற்றுக்கு விடை காணும் முயற்சியின் மூலம் நம் பார்வை ஆழத்தை ஊடுருவும் .. வெளிப்படையான காக்ஷியைத் தாண்டிச் செல்லும் .. இதற்கான பொறுமையும் மனப்பான்மையும் ராஜஸ குணத்திற்குக் கிடையாது .. அதனால் ராஜஸ குணத்தை ப்ரதானமாக் கொண்ட மநுஷ்யன் தெரிவதையே பார்க்கிறான் .. தெரிந்தபடியே பார்க்கிறான் ..
ரஜோ குணீ பல மொழிகளைப் பார்க்கிறான் .. ஸத்வ குணீ அம்மொழிகளின் மூலம் வெளிப்படும் ஒரே பாவனையைப் பார்க்கிறான் .. செப்பும் மொழி பதினெட்டுடையாள் .. எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் வார்தைகள் ஸாத்வீகத்திற்கு உதாஹரணம் ..
ஸமுதாயத்தில் நிலவும் உணவு , உடை , பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பார்த்துப் பிரித்திடும் ராஜஸம் .. ஸாத்வீகம் உணவு , உடை , பழக்க வழக்கங்கள் இவற்றில் தெரியும் பன்மைக்குப் பின்னணியில் இழைந்து ஓடும் ஒரே வாழ்க்கைக் கண்ணோட்டத்தைப் பார்த்து , இணைத்திடும் ..
ராஜஸம் பலவித உருவங்கள் , பலவித ஆற்றல்கள் , பலவித பயன்பாடுகள் கொண்ட ஶரீர அங்கங்களை வெவ்வேறாகப் பார்க்கிறது .. ஶரீரத்தைக் கூறு போட்டு அங்கங்களை ஆராய்ந்து அறிகிறது .. நோய்க் காலத்தில் அங்கங்களுக்கு வெவ்வேறு உபசாரங்களைச் செய்கிறது .. ஸாத்வீகம் அங்கங்களை இணைத்திடும் ஒரே ப்ராண ஶக்தியைப் பார்க்கிறது .. நோய்க்காலத்தில் ப்ராண ஶக்தியை வலுப்படுத்தி நோயைத் தீர்க்க முயல்கிறது ..
ராஜஸம் ஸம்ஸாரத்தை பன்மை நிறைந்த ஸ்ருஷ்டியாகப் பார்க்கிறது .. ஸாத்வீகம் பன்மையாகத் தெரிந்திடும் அனைத்திலும் உறைந்திடும் ஒரே பரமாத்மனைப் பார்க்கிறது .. ஒரே ஸூத்ரத்தில் கோர்த்திடும் படைத்தவனைக் காண்கிறது ..

Comments
Post a Comment