ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 264
नियतं सङ्गरहितमरागद्वेषत: कृतं अफलप्रेप्सुना कर्म सात्त्विकम् ... (अध्याय १८ - श्लोक २३)
நியதம் ஸங்கரஹிதம் அராகத்வேஷதஹ க்ருதம் அஃபல்ப்ரேப்ஸுநா கர்ம ஸாத்விகம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 23)
Niyatam Sangarahitam AraagaDweshatah Krutam Aphalaprepsunaa Karma Saattvikam .. (Chapter 18 - Shlokam 23)
அர்தம் : ஶாஸ்த்ரத்திற்கு உட்பட்டு , விருப்பு வெறுப்பு இல்லாமல் , ஃபலன் மீது பற்று வைக்காமல் செய்யப்பட்ட கர்மம் ஸாத்வீகம் ..
ஶாஸ்த்ரத்திற்கு உட்பட்ட கர்மம் ஸாத்வீக கர்மம் .. விக்ஞானம் விதிகளை மாத்ரம் சொல்லும் .. இயற்கையின் விதிகளைக் கூறிடும் .. அந்த விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் நன்மை .. விதிகளுக்கு முரண்பட்ட செயலாக இருந்தால் கேடு ..
தேஶத்தின் சட்டங்கள் ஸமூஹ வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும் , எதைச் செய்யக் கூடாது என்பதை மாத்ரம் சொல்லும் .. சட்டங்களுக்கு உட்பட்ட செயல்கள் நன்மை பயக்கும் .. முரண்பட்ட செயல்கள் கேடு விளைவிக்கும் ..
அதே போல , ஶாஸ்த்ரங்களும் தர்மம் என்ற களத்தில் எதைச் செய்ய வேண்டும் , எதைச் செய்யக் கூடாது என்பதை சொல்லும் .. ஶாஸ்த்ரங்களுக்கு உட்பட்ட கர்மங்கள் நன்மை செய்யும் .. முரண்பட்ட கர்மங்கள் கேடு விளைவிக்கும் ..
நன்மைக்கு ஆஶைப்பட்டோ கேட்டிற்கு பயந்தோ கர்மங்களை செய்தலோ தவிர்த்தலோ ரெண்டாம் பக்ஷம்தான் .. விருப்பு வெறுப்பு இல்லாமல் , ஃபலன் மீது பற்று வைக்காமல் செய்யப் படுபவை ஸாத்வீக கர்மங்கள் .. ஶாஸ்த்ரத்தின் மீது உள்ள ஶ்ரத்தை மாத்ரமே கர்மங்களுக்கு ஆதாரம் ..

Comments
Post a Comment