ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 266
अनुबन्धं क्षयं हिंसामनवेक्ष्य च पौरुषम् मोहादारभ्यते तत् कर्म तामसम् ... (अध्याय १८ - श्लोक २५)
அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாம் அனவேக்ஷ்ய ச பௌருஷம் மொஹாத் ஆரப்யதே தத் கர்ம தாமஸம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 25)
Anubandham Kshayam Himsaam Anavekshya Cha Pourusham Mohaad Aarbhyathe Tat Karma Taamasam .. (Chapter 18 - Shlokam 25)
அர்தம் : தன் ஸாமர்த்யத்தை அறியாமல் , விளைவாக ஏற்படக் கூடிய நாஶத்தையோ ஹிம்ஸையையோ சிந்திக்காமல் , மோஹத்தில் ஆரம்பிக்கப் பட்டது தாமஸ கர்மம் ..
அறியாமையே தாமஸனின் ப்ரதான லக்ஷணம் .. தன் ஸாமர்த்யத்தை அறிவதில்லை .. சிந்திக்காமல் கார்யத்தில் இறங்குவான் ..
செய்யும் கர்மத்தால் விளையக் கூடியதை அறிவதில்லை .. எத்தகைய பாதிப்பு ஏற்படக் கூடும் , இயற்கையின் மீதோ மற்ற உயிரினங்கள் மீதோ எத்தகைய வன்முறை ஏற்படக் கூடும் என்பதைச் சிந்திப்பதில்லை ..
மோஹம் அல்லது மயக்க நிலை தாமஸனின் மற்றொரு லக்ஷணம் .. கர்மங்களை ஆரம்பிக்கும் முன்னரும் , கர்மங்களைச் செய்திடும் போதும் , செய்து முடித்த பிறகும் தொடர்ந்திடும் மோஹம் .. தாமஸனின் கர்மங்கள் மோஹமும் அறியாமையும் கை கோர்த்து செய்யப் படுவன ..

Comments
Post a Comment