ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 267
मुक्त सङ्गोSनहंवादि धृत्युत्साह समन्वितः सिद्ध्यसिद्ध्योः निर्विकारः कर्ता सात्त्विक ... (अध्याय १८ - श्लोक २६)
முக்தஸங்கோ(அ)னஹம்வாதி த்ருத்யுத்ஸாஹ ஸமன்விதஹ ஸித்யஸித்யோர் நிர்விகாரஹ கர்தா ஸாத்விக . (அத்யாயம் 18 - ஶ்லோகம் 26)
Mukta Sango(a)nahamvaadi Dhrutyutsaaha Samanvithah Siddhyasiddhyoh Nirvikaarah Kartaa Saattvika .. (Chapter 18 - Shlokam 26)
அர்தம் : பற்றின்மையும் 'நான்' என்ற உணர்வின்மையும் த்ருட மன உறுதியும் உத்ஸாஹமும் கொண்டு வெற்றி தோல்விகளில் பாதிக்கப் படாதவன் ஸாத்வீக கர்தா ..
கார்யத்தின் மீது உள்ளப் பற்றுதான் ஒரு கார்யத்தைச் சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது .. கர்மஃபலன் மீது உள்ளப் பற்றுதான் கார்யத்தைச் செய்வதற்கே தூண்டுகோல் .. கார்யத்தில் கிடைத்திடும் வெற்றிதான் உத்ஸாஹத்திற்கு வித்து . கார்யத்தில் கிடைத்திடும் தோல்வி உத்ஸாஹத்தை வற்ற வைத்து மன உறுதியைக் குலைத்து விடும் .. இத்தகைய கருத்துக்கள் பரவலாக உள்ளன .. ஆனால் , சற்று ஆழமாகச் சிந்தித்தால் , இக்கருத்துக்கள் மேலோட்டமானவை என்பது புரியும் ..
கார்யத்தின் மீது பற்று அக்கார்யத்தைச் செய்ய உத்ஸாஹம் ஊட்டும் என்பது ஸத்யமே .. ஆனால் வேறு பல காரணங்களால் உத்ஸாஹம் வற்றி விடும் என்பதும் ஸத்யம் .. "இது செய்யத் தகுந்தது" , "இதைச் செய்தல் என் கடமை" என்ற எண்ணமே சிறந்த தூண்டுகோலாக முடியும் .. அதே போல , கர்ம ஃபலன் மீது உள்ள பற்று கார்யம் செய்வதன் மீது இருக்க வேண்டிய கவனத்தைக் குறைத்திடும் .. செயல் திறனைக் குறைத்திடும் .. வெற்றி உத்ஸாஹம் அளித்திடும் என்பதும் ஸத்யமே .. ஆனால் , வெற்றியும் தோல்வியும் செய்பவனுடைய முயற்சியைத் தவிர மற்ற பல விஷயங்களையும் சார்ந்து உள்ளன .. நேர்மையான முயற்சி மாத்ரம் நிஶ்சய வெற்றியை அளித்திடும் என்றில்லை .. அதனால் , வெற்றி தோல்வி என்று எது வந்தாலும் , செய்யப் பட வேண்டியதைத் தொடர்ந்து செய்து விடுவதே உயர்ந்தது ..
ஸாத்வீக கர்தா இத்தகைய மனப்பான்மையைக் கொண்டவன் ..
Comments
Post a Comment