ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 269
अयुक्तः प्राकृतः स्तब्धः शठः नैष्कृतिकः अलसः विषादी दीर्घसूत्री कर्ता तामस .. (अध्याय १८ - श्लोक २८)
அயுக்தஹ் ப்ராக்ருதஹ் ஸ்தப்தஹ ஶடஹ நைஷ்க்ருதிகஹ அலஸஹ விஷாதீ தீர்கஸூத்ரீ கர்தா தாமஸ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 28)
Ayukthah Praakruthah Stabdhah Shathah Naishkruthikah Alasah Vishaadhee Deergha Sootri Kartaa Taamasa .. (Chapter 18 - Shlokam 28)
அர்தம் : விழிப்புணர்வு இல்லாதவன் , பண்படாதவன் , முரடன் , வறட்டுப் பிடிவாதம் கொண்டவன் , சதிகள் தீட்டுபவன் , சோம்பேறி , வருத்தம் நிறைந்தவன் , தள்ளிப் போடுபவன் , தாமஸ கர்தா ..
மோஹம் , மூடநிலை , அறியாமை , சோம்பல் , மயக்கம் ஆகியவை தாமஸனின் அடையாளங்கள் .. தாமஸ கர்தாவைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிடும் லக்ஷணங்கள் அனைத்தும் இத்தாமஸத் தன்மைகளின் வெளிப்பாடுகளே .. அயுக்தஹ ... யோகம் அற்றவன் .. செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை பற்றி அறியாதவன் .. அயுக்தஹ என்றால் கவனம் இல்லாதவன் , ஶ்ரத்தை இல்லாதவன் என்றும் அர்தம் ஆகும் ..
ப்ராக்ருதஹ .. பட்டிக்காட்டான் என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்களே !! பண்படாதவன் , கல்வி இல்லாதவன் .. ப்ரக்ருதி என்றால் இயற்கை .. ப்ராக்ருதன் என்றால் உலகில் எப்படி வந்தானோ அப்படியே உள்ளவன் .. உலக வ்யவஹாரம் அறியாதவன் ..
ஸ்தப்தஹ : முரட்டுத்தனம் அல்லது ஜட நிலை .. பணிய முடியாத விறைப்பு .. ஆணவத்தால் ஏற்பட்ட விறைப்பு இல்லை .. சிந்தனை இல்லாததால் ஏற்பட்டது . ஸ்தம்பித்தது போன்ற நிலை ..
ஶட : வறட்டுப் பிடிவாதம் .. வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றையே பிடித்திருப்பவன் ..
நைஷ்க்ருதிகஹ : கேடுகள் செய்பவன் .. நேர்மை இல்லாதவன் .. சதிகள் தீட்டுபவன் ..
அலஸஹ : சோம்பல் நிறைந்தவன் .. தான் செய்ய வேண்டியதை அறியாதவன் .. அறிந்திருந்தாலும் பின்பற்றாதவன் .. தன் ஜாதி , வர்ணத்திற்கேற்ற கர்மங்கள் .. உலக வாழ்க்கைக்கு ஏற்ற கர்மங்கள் .. இவற்றைச் செய்யாமல் வீண் அரட்டையிலும் , சோம்பலிலும் , தூக்கத்திலும் , வெற்றுப் பொழுதுபோக்குகளிலும் நேரத்தைக் கடத்துபவன் ..
விஷாதி : ஶோகத்தில் மூழ்கி இருப்பவன் .. அந்யரின் நல்ல நிலையை , தன் அவல நிலையை நினைப்பதால் ஏற்படும் ஶோகம் .. எனினும் , இந்நிலையை மாற்றிக் கொள்ள இயலாதவன் தாமஸன் ..
தீர்க ஸூத்ரீ : தள்ளிப் போடுபவன் .. பிறகு செய்யலாம் என்று நினைத்து தத்க்ஷணத்தை கடத்துபவன் ..

Comments
Post a Comment