ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 270
प्रवृत्तिंच निवृत्तिं च कार्याकार्ये भयाभये बन्धं मोक्षं च वेत्ति सा सात्त्विकी बुद्धि ... (अध्याय १८ - श्लोक ३०)
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் கார்யாகார்யே பயாபயே பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி ஸா புத்தி ஸாத்விகீ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 30)
Pravuttim cha Nivruttim KaaryaaKaarye Bhayaabhaye Bandham Moksham cha Yaa Vetti saa Buddhi Saattvikee ... (Chapter 18 - Shlokam 30)
அர்தம் : உகந்த செயல் எது , செய்யத் தகாதது எது , கடமை எது , கடமை அல்லாதது எது , பயம் கொள்ள வேண்டியது எது , அல்லாதது எது , பிணைப்பது எது , விடுவிப்பது எது என்பதை அறியும் புத்தி ஸாத்வீக புத்தி ..
எந்தச் செயலைச் செய்வது என்று அறிந்திருப்பது ஸாத்வீகம் .. இடம் மற்றும் ஸந்தர்பத்திற்கு ஏற்ப எதைச் செய்வது , எதைத் தவிர்ப்பது என்று அறிந்திருக்க வேண்டும் .. இது கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் இல்லை .. இது ஸ்வபாவத்தை ஸார்ந்தது .. ஸாத்வீகனுக்கு இது ஸஹஜமானது .. பற்று மற்றும் ஸ்வயநல விருப்பங்கள் இல்லாததாலும் , விளைவாக பரபரப்பு இல்லாததாலும் , மனஸின் தடுமாற்றங்கள் , பரபரப்பு மற்றும் கொந்தளிப்புகளை வஶப்படுத்தி , சிந்தனை செய்யும் புத்தி ஸரியாகவே சிந்திக்கும் .. இதுதான் ஸாத்வீக புத்தி ..
Comments
Post a Comment