ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 271
अयथावत्प्रजानाती बुद्धिः सा तामसी .. (अध्याय १८ - श्लोक ३१)
அயதாவத் ப்ரஜானாதி ஸா புத்தி ராஜஸீ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 31)
Ayathaavat Prajaanaati Saa Buddhi Raajasi ... (Chapter 18 - Shlokam 31)
அர்தம் : குழப்பமாக அறிந்திருக்கும் புத்தி ராஜஸ புத்தி ஆகும் ..
ராஜஸனின் ஸஹஜத் தன்மை பரபரப்பு .. பரபரப்பாக சிந்திப்பவன் .. பரபரப்பாகச் செயல் புரிபவன் .. பரபரப்பாக அநுபவிப்பவன் .. அவனுள் நிறைந்திருக்கும் பற்று தான் இதற்குக் காரணம் .. ஃபலன் மீது உள்ள பற்று .. ஃபலன் மீது உள்ள நாட்டம் .. இதன் விளைவாகத் தோன்றிடும் பரபரப்பு மனஸில் கொந்தளிப்பையும் தடுமாற்றத்தையும் உடன் தோற்றுவித்திடும் .. சிந்தனையில் , புத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திடும் .. அத்தகைய புத்தி கால , தேஶ , ஸந்தர்பத்திற்கு ஏற்ற செயல்களை நிர்ணயம் செய்ய முடியாமல் குழம்பிடும் .. இதுவே ராஜஸ புத்தி ..
Comments
Post a Comment