ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 272
सर्वार्थान्विपरीतांश्च सा बुद्धि तामसी .. (अध्याय १८ - श्लोक ३२)
ஸர்வார்தான் விபரீதாம்ஶ்ச ஸா புத்தி தாமஸீ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 32)
Sarvaarthaan Vipareetaamscha saa Buddhi Taamasi ... (Chapter 18 - Shlokam 32)
அர்தம் : எதிர்மறையாக அறிந்திருக்கும் புத்தி தாமஸ புத்தி ..
தாமஸ புத்தி விபரீதமாக , எதிர்மறையாக அறிந்திடும் .. தாமஸம் என்பதன் ப்ரதான அடையாளம் அக்ஞானம் .. அத்துடன் ஸோம்பலும் சேர்கிறது .. விளைவாக அறிந்திடும் ஆர்வம் தோன்றுவதில்லை .. வறட்டுப் பிடிவாதமும் சேர்ந்தால் !! எதிர்மறையாகவே அறிந்திடும் ..
ஒன்று ஸ்வயமாக விவேகத்துடன் சிந்தித்து ஸரியானதை அறிய வேண்டும் .. அல்லது பணிவுடன் பிறரிடம் கேட்டு அறிய வேண்டும் .. தாமஸனிடம் விவேகம் கிடையாது .. சோம்பல் காரணமாக ஸ்வய சிந்தனை செய்வதில்லை .. பிறரிடம் கேட்டு அறிவதற்கு ஏற்ற பணிவு கிடையாது .. எனவே , தாமஸ புத்தி விபரீதமாக , அதாவது எதிர்மறையாக அறிந்திடும் .. தர்மத்தை அதர்மமாக , அதர்மத்தை தர்மமாக அறிந்திடும் ..

Comments
Post a Comment