ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 274
धर्म कामार्थान्धृत्या धारयते प्रसङ्गेन फलाकांक्षी धृतिः सा राजसी .. (अध्याय १८ - श्लोक ३४)
தர்ம காமார்தான் த்ருத்யா தாரயதே ப்ரஸங்கேன ஃபலாகாங்க்ஷீ த்ருதி ஸா ராஜஸி .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 34)
Dharma Kaamaarthaan Dhrutyaa Dhaarayate Prasangena Phalaakaankshee Dhrutih saa Raajasi .. (Chapter 18 - Shlokam 34)
அர்தம் : எந்த உறுதியால் ஒருவன் கடமை , காமம் மற்றும் தனத்தைப் பற்றுகிறானோ , ஃபலன் மீது உள்ள நாட்டத்தால் , அதுவே ராஜஸ த்ருதி ..
த்ருதி என்பது மன உறுதி .. லக்ஷ்யத்தை உறுதியாகப் பற்றுவதும் த்ருதி .. ஸத்யத்தையும் அஹிம்ஸையையும் உறுதியாகப் பற்றுவதும் த்ருதியே .. இது ஸாத்வீக த்ருதி ஆகும் .. பணத்தையும் காமத்தையும் உறுதியாகப் பற்றுவதும் த்ருதியே .. பணத்தைப் பெட்டியில் வைத்து அலங்கரிப்பது , பணத்தைத் தொட்டு மகிழ்வது , பணத்தை அடிக்கடி எண்ணிப் பார்ப்பது .. இவை எல்லாம் பணத்தின் மீது உறுதியாக வைத்தப் பற்றின் வெளிப்பாடுகள் .. பணம் கொடுக்கக் கூடிய ஃபலன்கள் மீது உள்ள நாட்டம் தான் பணத்தைப் பற்ற வைக்கிறது .. அந்தப் ஃபலன்களில் இருந்து விளையக் கூடிய ஸுகம் வேண்டி இருப்பதால் பணத்தை உறுதியாகப் பற்றுகிறான் .. அதே போல காமத்தையும் உறுதியாகப் பற்றுகிறான் .. இதன் பின்னணியிலும் ஸுகத்தின் மீது உள்ள நாட்டமே இதன் பின்னணியிலும் உள்ளது .. இவன் செயல்களில் தீவ்ரமாக ஈடுபடுவதும் இதே காரணத்தால் .. இந்த உறுதி ராஜஸ த்ருதி ஆகும் ..
Comments
Post a Comment