ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 275
यया स्वप्नं भयं शोकं विषादं मदं न विमुञ्चति दुर्मेधा धृतिः सा तामसी .. (अध्याय १८ - श्लोक ३५)
யயா ஸ்வப்னம் பயம் ஶோகம் விஷாதம் மதம் ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி ஸா தாமஸி .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 35)
Yayaa Swapnam Bhayam Shokam Vishaadam Madam na vimunchati Durmedhaa Dhrutih saa Taamasi .. (Chapter 18 - Shlokam 35)
அர்தம் : எந்த உறுதியால் அக்ஞானியால் கனவு , பயம் , ஶோகம் , குழப்பம் மற்றும் ஆணவம் இவற்றை விட முடிவதில்லையோ , அதுவே தாமஸ த்ருதி ..
நெடுநீர் மறவி மடி துயில் இவை நான்கும்
கெடுநீரான் காமக்கலன் ... என்றார் ஸ்ரீ வள்ளுவர் .. "தூக்கம் எனக்குத் தடையாக இருக்கிறது .. என்னுள் ஆழப் பதிந்திருக்கும் சோம்பலும் தள்ளிப் போடுதலும் வளர்ச்சியை பாதிக்கிறது" என்பதை உணர்ந்தாலும் தாமஸனால் அவற்றை உதறித் தள்ள முடிவதில்லை ,, அவனுள் இருக்கும் த்ருதி சோம்பலையும் மற்ற தாமஸத் தன்மைகளையும் இறுகப் பற்றுகிறது .. இது தாமஸ த்ருதி ஆகும் .. இதுவும் மன உறுதியே .. ஆனால் , தாமஸ உறுதி ..
அதே போல , பயம் , துயரம் , குழப்பம் மற்றும் ஆணவம் போன்ற தன்மைகள் தன்னுள் வேர் விட்டு நிலைத்திருக்கிறது என்பதை தாமஸன் அறிந்து இருக்கிறான் .. உலக வாழ்க்கையில் இவை தனக்கு பாதகமாக இருப்பதையும் அறிந்தே இருக்கிறான் .. எனினும் , தாமஸன் இவற்றுக்கு எதிராகப் போராடுவதில்லை .. இவற்றைக் களைந்து எறிந்திட முயல்வதில்லை .. இவற்றைத் தன் ஸ்வபாவமாக , ரக்தத்துடன் கலந்து விட்ட ஸ்வபாவமாக , மாற்ற முடியாத இயல்பாக ஏற்றுக் கொண்டு விடுகிறான் .. இத்தன்மைகளும் இவனுள் உறுதியாக நிலைத்து விடுகின்றன .. அவை இவனைப் பற்றி உள்ளனவா இவன் அவற்றைப் பற்றி உள்ளானா என்று அறிய முடியாத அளவிற்கு இறுக்கம் ஏற்பட்டு விடுகிறது .. இந்த உறுதியே தாமஸ த்ருதி ஆகும் ..

Comments
Post a Comment