ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 276
अभ्यासात् रमते यत्र .. (अध्याय १८ - श्लोक ३६)
அப்யாஸாத் ரமதே யத்ர ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 36)
Abhyaasaat Ramate Yatra .. (Chapter 18 - Shlokam 36)
அர்தம் : பயிற்சி செய்யச் செய்ய மனஸ் லயித்திடும் ..
பயிற்சி செய்யச் செய்ய மனஸ் லயித்திடும் .. நல்ல ஸங்கீதம் , மனஸிற்கு ஹிதம் அளிக்கும் அமைதியான ஸங்கீதம் கேட்பதில் ஸுகம் இருக்கிறதா ? மிதமான ருசி உள்ள போஜனம் நாவிற்கு ஸுகம் அளிக்கிறதா ? விடிவதற்கு முன் எழுந்து தேஹப் பயிற்சி செய்வது மனஸிற்கு ஸுகம் அளிக்கிறதா ? ஒரு விஷயத்தை ஆழமாகப் படித்து அறிந்து கொள்வதில் மனஸ் ஆனந்தம் அடைகிறதா ?? பெரும்பாலோருக்கு 'இல்லை' என்பதே அனைத்து கேள்விகளுக்கும் பொதுவான பதில் .. மிகக் குறைவான சிலரே 'ஆம்' என்று பதில் அளிப்பர் .. அவர்களுடைய அநுபவத்தைக் கேட்டால் பொதுவான ஒரு விஷயம் வெளிப்படும் .. பயிற்சி செய்யச் செய்யத்தான் மனஸ் இவற்றிலும் இவை போன்ற செயல்களிலும் லயிக்கும் .. ஆழமாக லயிக்க லயிக்க இவை அலாதியான ஸுகம் அளித்திடும் . இதுவே ஸாத்வீக ஸுகம் ..

Comments
Post a Comment