ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 277
यत्तदग्रे विषमिव परिणामे(S)मृतोपमम् तत्सुखं सात्त्विकम् .. (अध्याय १८ - श्लोक ३६)
யத்தத் அக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம் தத் ஸுகம் ஸாத்விகம் ..(அத்யாயம் 18 - ஶ்லோகம் 36)
Yat Tadagre Vishamiva Parinaame Amrutopamam Tat Sukham Saattvikam .. (Chapter 18 - Shlokam 36)
அர்தம் : ஆரம்பத்தில் விஷம் போல இருந்தாலும் விளைவு அம்ருதத்திற்கு ஸமமாக இருந்திடும் ஸுகம் ஸாத்வீக ஸுகம் எனப்படும் ..
ரம்யமான நல்ல ஸங்கீதம் பாடுபவருக்கும் கேட்பவருக்கும் ஸுகம் அளிக்கக் கூடியது .. அம்ருதத்திற்கு ஒப்பானது அந்த ஸுகம் .. பயிற்சியின் விளைவு இது .. அந்த ஸுகத்தை அநுபவித்திட எத்தனை வர்ஷங்கள் பயிற்சி எடுக்க வேண்டும் ?? எவ்வளவு கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும் ?? அந்தப் பயிற்சி ஸுகம் அளிக்கக் கூடியதா ?? ஸுகங்களைத் தவிர்த்து விட்டே பயிற்சி எடுக்க வேண்டும் ..
ஆரோக்யமான ஶரீரம் ஸுகமான வாழ்க்கைக்கு ஆதாரம் .. உத்ஸாஹமும் வலிமையையும் ஆற்றலும் கொண்ட நோயற்ற ஶரீரம் கிடைப்பதற்கு தொடர்ச்சியான தேஹப்பயிற்சி அவஶ்யமானது .. எவ்வளவு நீண்ட காலம் ? எத்தகைய பயிற்சி ?? அப்பயிற்சி ஸுகம் அளிக்கக் கூடியதா ?? இல்லை .. பல ஸுகங்களைத் த்யாகம் செய்து விட்டே பயிற்சி செய்ய வேண்டும் ..
கால்பந்தில் மெஸ்ஸி போன்ற விளையாட்டு வீரர்களின் கலைநயம் மிகுந்த தேர்ந்த விளையாட்டைப் பார்ப்பதும் ஸுகம் .. அவ்வாறு விளையாடுவதும் ஸுகம் .. அத்தகைய ஸுகம் அநுபவித்தல் என்பது விளைவு .. பயிற்சியின் பரிணாமம் .. தினஸரி பயிற்சி .. வரஷக் கணக்கில் நீளும் பயிற்சி .. கடுமையான பயிற்சி .. பல்வேறு ஸுகங்களை மறந்து செய்யப் பட வேண்டிய பயிற்சி ..
ஒரு பரத நாட்ய நிபுணரின் அனுபவமும் இதே .. வேறு பல உதாஹரணங்களையும் அடுக்கலாம் .. இவை அனைத்தும் வார்தைகளால் வர்ணிக்க முடியாத ஸுகங்கள் .. அலாதியான ஸுகங்கள் .. இவை அனைத்தும் ஆரம்ப நிலையில் ஸுகம் அளிக்கக் கூடியவை அல்ல .. எதிர்மாறாக , ஸுகங்களை த்யாகம் செய்து , பயிற்சியில் ஈடுபட வேண்டும் .. பயிற்சி கடுமையானது .. மனஸிற்குக் கசப்பு அளிக்கக் கூடியது .. இன்றைய கால மொழியில் சொல்ல வேண்டும் என்றால் Boring experience .. ஆனால் , இவை அனைத்திலும் விளைவு ஸுகமானது .. அம்ருதத்திற்கு ஒப்பானது ..
இதையே ஸ்ரீ க்ருஷ்ணன் ஸாத்வீக ஸுகம் என்கிறார் ..

Comments
Post a Comment