ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 278
आत्म बुद्धि प्रसादजम् .. (अध्याय १८ - श्लोक ३७)
ஆத்ம புத்தி ப்ரஸாதஜம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 37)
Aatma Buddhi Prasadajam .. (Chapter 18 - Shlokam 37)
அர்தம் : ஆத்ம க்ஞானத்தில் ஒலியுறும் புத்தியில் இந்த ஸுகம் ஜனித்திடும் ..
अर्थ : आत्म ज्ञान में प्रकाशित बुद्धि में जन्मता है सात्त्विक सुख ।
Meaning : This is born in the Buddhi enlightened by Self - Knowledge ..
ஸாத்வீகமே ஆத்மீகம் இல்லை .. முக்குணங்களைத் தாண்டினால் , ஸாத்வீகத்தையும் தாண்டினால் தான் ஆத்மீகம் .. ஆனால் , ஸாத்வீகம் ஆத்ம க்ஞானத்திற்கு அருகில் உள்ளது .. ஸாத்வீகத்தில் இருந்து ஆத்ம அநுபவத்திற்குச் செல்லுதல் ஸுலபம் ..
ஸாத்வீக ஸுகம் வெளியில் இருந்து , உலகத்தில் இருந்து கிடைப்பதில்லை .. இந்த்ரியங்கள் மூலமாக , மனஸால் துய்க்கப் படுவதில்லை .. ஆத்ம க்ஞான ஒளியால் மிளிரும் புத்தியால் அநுபவிக்கப் படுகிறது ..
Comments
Post a Comment