ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 279
विषयेन्द्रिय संयोगात् यत्तदग्रे अमृतोपमं परिणामे विषमिव तत्सुखं राजसम् .. (अध्याय १८ - श्लोक ३८)
விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத்ததக்ரே அம்ருதோபமம் பரிணாமே விஷமிவ தத் ஸுகம் ராஜஸம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 38)
Vishayendriya Samyogaat Yattadagre Amruthopamam Parinaame Vishamiva thath Sukham Raajasam .. (Chapter 18 - Shlokam 38)
அர்தம் : ராஜஸ ஸுகம் இந்த்ரியங்கள் மற்றும் விஷயங்களின் இணைப்பினால் ஜனிக்கிறது .. ஆரம்பத்தில் அம்ருதம் போலவும் விளைவில் விஷம் போலவும் இருந்திடும் ..
பொதுவாக ஸுகம் என்று நாம் கருதும் அனைத்தும் இந்த்ரியங்கள் மற்றும் விஷயங்களின் இணைப்பால் உருவாகுபவை .. கண் காக்ஷியுடனும் காது ஶப்தத்துடனும் நாஸி கந்தத்துடனும் நாக்கு ருசியுடனும் தோல் ஸ்பர்ஶம் மூலம் வஸ்துக்களுடனும் இணைந்திடும் போது உருவாகும் அநுகூல அநுபவத்தை ஸுகம் என்கிறோம் .. ப்ரதிகூல அநுபவத்தை து:கம் என்கிறோம் .. இவ்வகை ஸுகத்தை இந்த்ரிய ஸுகம் அல்லது ஶரீர ஸுகம் என்றும் அறிகிறோம் ..
இவ்வகை ஸுகங்கள் இந்த்ரியங்கள் மூலமாகவே அறியப் படுகின்றன .. மனஸால் அநுபவிக்கப் படுகின்றன .. இவை ஆரம்பத்தில் அம்ருதம் போல , மனஸிற்கு ஹிதமாக இருந்திடும் .. மனஸ் இந்த ஸுகங்களில் லயித்திடும் .. மீண்டும் மீண்டும் இவற்றை நாடிடும் .. ஆனால் , இவ்வகை ஸுகங்களை து:க ஶோக ஆமய ப்ரதா என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. அதாவது , இறுதியில் இந்த ஸுகங்களில் இருந்து பரிணாமமாக , கஷ்டம் , மன வருத்தம் மற்றும் நோய் விளைந்திடும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. இந்த்ரியங்கள் மீண்டும் மீண்டும் விஷயங்களுடன் இணைவதால் , காலப்போக்கில் தளர்ந்து விடுகின்றன .. தத்தம் ஆற்றல் இழந்து விடுகின்றன .. ஶரீரத்தில் பலஹீனம் மற்றும் பல்வகை நோய்களைத் தோற்றுவித்து , கஷ்டத்திற்குக் காரணமாகி விடுகின்றன ..
ஆற்றல் இழந்த இந்த்ரியங்கள் தத்தம் விஷயங்களுடன் இணையும் போது , அதே அளவு ஸுகம் கிடைப்பதில்லை .. மன வருத்தத்திற்குக் காரணம் ஆகிறது .. உலகத்தில் , நம் இந்த்ரியங்களுக்கான விஷயங்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதில்லை என்பதும் மன வருத்தத்திற்குக் காரணம் ஆகிறது ..

Comments
Post a Comment