ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 280
यदग्रे चानुबन्धे सुखं मोहनमात्मनः निद्रालस्य प्रमादोत्थं तत्तामसं सुखम् .. (अध्याय १८ - श्लोक ३९)
யத்தத் அக்ரே சாநுபந்தே ஸுகம் மோஹனமாத்மனஹ நித்ராலஸ்ய ப்ரமாதோத்தம் தத்தாமஸம் ஸுகம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 39)
Yadagre Chaanubandhe Sukham Mohanamaatmanah Nidraalasya Pramaadotthama Tataamasam Sukham .. (Chapter 18 - Shlokam 39)
அர்தம் : நித்ரை , ஸோம்பல் மற்றும் அலக்ஷ்யத்தில் இருந்து தோன்றும் ஸுகம் தாமஸம் .. மோஹத்தில் மூழ்கடிக்கும் ..
தாமஸத்தின் ப்ரதான லக்ஷணம் மோஹம் , மயக்கம் , ஸ்வய நினைவு இன்மை .. சில வகை ஸுகங்கள் மயங்க வைக்கும் .. கிறங்க வைக்கும் .. இவற்றை ஸுகம் என்று அழைப்பதா ?? அநுபவிப்பவன் இவ்வகை ஸுகங்களையும் மீண்டும் மீண்டும் நாடுவதால் 'ஸுகம்' என்றே சொல்ல வேண்டும் .. மதுவும் மற்ற லாஹிரி வஸ்துக்களும் சிலருக்கு ஸுகம் அளிக்கின்றன என்பது ஸத்யமே .. மோஹத்தில் ஆழ்த்தும் இவ்வகை ஸுகங்கள் தாமஸ ஸுகங்கள் ..
ஸுகத்தை அநுபவிக்கும் முன்னர் ஸுகம் அநுபவிக்கும் விருப்பம் பிறப்பதும் மோஹ நிலையிலே .. மோஹம் அல்லது மயக்கம் இல்லை என்றால் போதையில் மூழ்க அடிக்கும் இவ்வகை ஸுகங்களை அநுபவிக்கும் ஆஶை பிறந்திடுமா ?? ஸுகம் அநுபவித்த பின்னர் விளைவாகப் பிறப்பதும் மோஹ நிலையே ..
வஸ்துக்களில் பிறப்பது போல தோன்றினாலும் , தாமஸ ஸுகம் பிறப்பது தாமஸ ஸ்வபாவமான சோம்பல் , அலக்ஷ்யம் ஆகியவற்றால் மோஹிக்கப் பட்டிருக்கும் புத்தியில் இருந்து , அரை மயக்கத்தில் இருக்கும் புத்தியில் இருந்து ..
Comments
Post a Comment