ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 281
ब्रह्म कर्म स्वभावजम ... (अध्याय १८ - श्लोक ४२)
ப்ரஹ்ம கர்ம ஸ்வபாவஜம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 42)
Brahma Karma Swabhaavajam ... (Chapter 18 - Shloka 42)
அர்தம் : ப்ராஹ்மணனின் (ப்ரஹ்மத்தின்) ஸ்வபாவமான கர்மங்கள் ...
ப்ராஹ்மணனின் கர்மங்கள் அல்லது செயல்கள் இந்தத் தன்மைகள் கொண்டவையாக இருந்திடும் ..
(1) . ஶமஹ - அமைதி .. பரபரப்பு இன்மை .. (2) . தமஹ - கட்டுப்பாடு .. புலன் அடக்கம் .. (3) . தபஸ் - தொடர்ச்சியான முயற்சி .. எத்தனை இடர்களும் கவர்ச்சியிலும் எதிர்ப்பட்டாலும் இடறி விடாமல் தொடர்ந்த முயற்சியில் ஈடுபடுதல் .. (4) . ஶௌசம் - தூய்மை .. புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை . (5) . க்ஷாந்தி - மன்னிக்கும் தன்மை .. (6) . ஆர்ஜவம் - நேர்மை , எளிமை .. (7) . க்ஞானம் .. அறிதல் .. (8) . விக்ஞானம் - அறிந்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் .. (9) . ஆஸ்திக்யம் - நம்மை மீறிய ஒன்று இருக்கிறது என்ற ஆழமான ஶ்ரத்தை ..
இவை தன்மைகள் .. ப்ராஹ்மணனின் ஸஹஜ ஸ்வபாவம் - அவனுடைய கர்மங்கள் , வாக்கு மற்றும் சிந்தனை - அவனுடைய வாழ்க்கையில் வெளிப்படும் ..
ஶம: அல்லது அமைதி , தம: அல்லது கட்டுப்பாடு , தபஸ் அல்லது தொடர் முயற்சி ஆகிய தன்மைகளின் விளைவால் ஸங்கீதம் , பஜனை , வேதம் ஓதுதல் , யோகம் , ஸாஹித்யம் போன்ற துறைகளில் தொடர்ந்து வர்ஷக்கணக்கில் , ஏன் ! வாழ்க்கை முழுவதும் ஈடுபட முடிகிறது .. ஸுஸ்வரமாகப் பாடக் கூடியவர்கள் அனைத்து ஸமுதாயங்களிலும் பிறக்கிறார்கள் .. ஆழமான அமைதி உள்ளவர்களே ஸங்கீதத்தின் ஆழங்களை அடைகிறார்கள் .. ஆழத்தை நோக்கிய ப்ரயாணம் செய்வதற்கும் அமைதி அவஶ்யமானது ..
ஶௌசம் -- ஶரீரத் தூய்மை , வாக்குத் தூய்மை , சிந்தனையில் தூய்மை -- ரெண்டு வேளைகள் ஸ்நானம் , ஆசமனீயம் , மடி வஸ்த்ரம் ஆகியவை ஶரீர ஶௌசத்திற்காகவும் , ஸ்பஷ்ட உச்சரிப்பு , நல்ல வார்தைகள் , கருத்துள்ள பேச்சு ஆகியவை வாக் ஶௌசத்திற்காகவும் , தெய்வ உபாஸனை , வேத பாராயணம் , ஸத்ஸங்கம் ஆகியவை சிந்தனையின் ஶௌசத்திற்காகவும் ப்ராஹ்மணன் அநுஷ்டிக்கிறான் ..
க்ஷாந்தி அல்லது மன்னிக்கும் தன்மை .. பொறுமை -- பழி வாங்க வேண்டும் , பதிலடி கொடுக்க வேண்டும் , நான் யார் என்று நிரூபிக்க வேண்டும் போன்ற தன்மைகள் உலகாயத வாழ்க்கையில் ஸஹஜமாகக் காணப் படுபவை .. இவை நம் வாழ்க்கையின் திஶையை மாற்றக் கூடியவை .. நாம் ஈடுபட விரும்பும் விஷயத்தில் இருந்து நம்மை புறம் தள்ளக் கூடியவை .. ஆன்மீக முயற்சிகளை பாதிக்கக் கூடியவை .. பகவான் மீதுள்ள ஶ்ரத்தையும் க்ஷாந்தியை , மன்னிக்கும் தன்மையை வலுப்படுத்துகிறது ..
ஆர்ஜவம் -- நேர்மை .. எளிமை .. உள்ளே உள்ளதும் வெளியே தெரிவதும் ஒன்றே .. கபடம் இல்லாமை .. இறை ஶ்ரத்தை இத்தன்மையை வளர்த்து விடும் ..
க்ஞானம் -- அறிய வேண்டும் என்ற ஆர்வம் , அறிவதற்கான முயற்சி .. நேர்மையான முயற்சி , தொடர்ந்த முயற்சி இவை இருந்தால் க்ஞானம் ஸம்பாதிக்கலாம் .. மேல் எழுந்த வாரியாக அல்லாமல் ஆழமாக அறிய வேண்டும் , அடிப்படை ஸத்யத்தை அறிய வேண்டும் என்ற தாஹம் மிக அவஶ்யமானது ..
விக்ஞானம் -- அறிந்ததைத் தம் வாழ்க்கையில் செயல் படுத்த வேண்டும் என்பது நேர்மையின் வெளிப்பாடு ..
ஆஸ்திக்யம் -- இறைவன் மீது , நம்மை மீறிய ஒரு ஶக்தி மீது உறுதியான நம்பிக்கை -- ப்ராஹ்மணனின் அஸ்திவாரமே இதுதான் .. ப்ராஹ்மணன் நக்ஸலைட் ஆக முடியும் .. கோபத்தின் விளைவால் .. ஆனால் , த்ராவிடக் கழகத்தில் இருக்க முடியாது ..
ப்ராஹ்மணனின் கர்மங்களில் இத்தன்மைகள் வெளிப்படும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments
Post a Comment