ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 282
क्षात्रं कर्म स्वभावजम ... (अध्याय १८ - श्लोक ४३)
க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 43)
Kshaatram Karma Swabhaavajam ... (Chapter 18 - Shloka 43)
அர்தம் : க்ஷத்ரியனின் (க்ஷாத்ரத்தின்) ஸ்வபாவமான கர்மங்கள் ...
க்ஷத்ரியனின் கர்மங்கள் இந்த இயல்புகளை வெளிப்படுத்தும் .. (1) .. ஶௌர்யம் - ஶூரத்தனம் - துணிச்சல் - பொதுவாக யாரும் செய்யத் துணியாத கார்யங்களைச் செய்தல் .. (2) .. தேஜஹ -- ரெண்டு அர்தங்கள் சொல்லலாம் . (அ) - பிறர் மீது தாக்கம் ஏற்படுத்தும் ஆற்றல் . (ஆ) - வேகம் .. (3) .. த்ருதிஹி - பொறுமை , கஷ்டங்களைத் கொள்ளும் தன்மை .. (4) .. தாக்ஷ்யம் .. ஜாக்ரத உணர்வு , விழிப்பு உணர்வு .. (5) .. யுத்தே சாப்யபலாயனம் .. யுத்தத்தில் இருந்து பின் வாங்காத நிலை .. (6) - தானம் .. தானம் ஒரு க்ஷத்ரியனின் ப்ரதானத்தன்மை .. (7) .. ஈஶ்வர பாவஹ - நானே ஈஶ்வரன் , நானே அனைத்தையும் கட்டுப்படுத்துபவன் , நானே Boss / பாஸ் என்ற தோரணை ..
க்ஷத்ரியனின் ஸஹஜ ஸ்வபாவமான இந்தத் தன்மைகள் அவனது கர்மங்களில் வெளிப்படும் ..
ஶௌர்யம் -- ஶூரத்தனம் .. துணிச்சல் .. லவலேஶ பயமும் அற்ற நிலை .. ஆங்க்லத்தில் Dare Devil என்பார்களே , அது ..
தேஜஸ் .. மற்றவர் மீது தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் .. ஒரு ரயில் வண்டி மிக வேகமாகச் செல்லும் போது , பக்கத்து தண்டவாளம் மீது தனியாக நிற்கும் ரயில் பெட்டிக்கு கொஞ்ஜம் வேகம் கிடைக்கிறது .. இது தேஜஸ் .. அமைதியான ஒருவரின் அருகில் அமர்ந்திருக்கும் போது , நம் மனஸும் அமைதியால் நிறைகிறது .. இது தேஜஸ் .. வீரமான ஒருவரின் ஸாஹஸத்தைக் கேட்கும் போது , நம் மனஸில் சில க்ஷணங்களுக்கு வீர உணர்வு எழுகிறது .. நாமும் அவரைப் போல் ஆக வேண்டும் என்ற ஸங்கல்பம் பிறக்கிறது .. இது தேஜஸ் .. தேஜஸ் என்ற பதம் வேகம் என்றொரு அர்தத்திலும் உபயோகம் ஆகிறது .. க்ஷத்ரியன் வேகம் நிறைந்தவன் .. வேகமான நிர்ணயங்கள் .. வேகமான செயல்கள் ..
த்ருதி .. பொறுமை .. கஷ்டங்களை , குறிப்பாக ஶரீரத்தின் வலி வேதனையைத் தாங்கும் மனோ வலிமையே த்ருதி ..
தாக்ஷ்யம் .. விழிப்புணர்வு .. கூர்மையான கண்களும் காதுகளும் .. எங்கெங்கு என்னென்ன நடக்கிறது என்பதை அறிந்திடும் முயற்சி .. எவர் எவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிந்து அவரைப் பற்றிய சரியான கணிப்பு வைத்திருப்பவர் ..
யுத்தே அபலாயனம் .. எடுத்த கார்யத்தில் இருந்து ஓடா மன நிலை .. போராட்டத்திற்குப் புற முதுகு காட்டா தன்மை .. தோல்வி பயம் இல்லாமை ..
தானம் .. அஹங்காரம் நிறைந்தவன் தானம் கொடுப்பது ஸஹஜம் .. நானே இவர்கள் அனைவரையும் போஷிக்கிறேன் என்ற அஹங்காரம் .. இது க்ஷத்ரியனின் ஸ்வபாவம் ..
ஈஶ்வர பாவம் .. நான்தான் ஸர்வாதிகாரம் படைத்தவன் .. என் கையில் எல்லாம் .. நானே அனைவருக்கும் ஈஶன் (boss) என்ற மன நிலை ..
இத்தன்மைகள் ஒரு க்ஷத்ரியனின் ஸ்வபாவம் .. அவனது எண்ணத்திலும் , வாக்கிலும் செயல்களிலும் இத்தன்மைகள் வெளிப்படும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
Comments
Post a Comment