ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 283
वैश्य कर्म स्वभावजम ... (अध्याय १८ - श्लोक ४४)
வைஶ்ய கர்ம ஸ்வபாவஜம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 44)
Vaishya Karma Swabhaavajam ... (Chapter 18 - Shloka 44)
அர்தம் : வைஶ்யனின் ஸ்வபாவமான கர்மங்கள் ...
க்ருஷி (வ்யவஸாயம்) , கௌ ரக்ஷம் (பஶு பாதுகாப்பு) மற்றும் வாணிஜ்யம் (வ்யாபாரம்) இவை வைஶ்யனின் ஸஹஜ ஸ்வபாவ கர்மங்கள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
ப்ராஹ்மணன் மற்றும் க்ஷத்ரியனைப் பற்றிப் பேசும்போது ஸ்வபாவங்களைக் குறிப்பிட்ட ஸ்ரீ க்ருஷ்ணன் வைஶ்யனைக் குறிப்பிடும் போது , தொழில்களைக் குறிப்பிடுகிறார் .. ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிட்ட இம்மூன்றும் செல்வத்தைப் பெருக்கும் தொழில்கள் .. ஒரு மணியை இருநூறாகப் பெருக்குவது வ்யவஸாயம் .. பணத்தைப் பெருக்குவது வ்யாபாரம் .. பஶுவும் பெருகும் செல்வம் .. கோதனம் என்றே பஶுவை அழைக்கிறோம் .. பஶு லக்ஷ்மியாக பூஜிக்கப் படுகிறது ..
செல்வத்தைப் பெருக்குவதே வைஶ்யனின் கடமை .. இயல்பாகவே பணத்தைப் பெருக்கும் நோக்கத்துடனே வைஶ்யனின் கர்மங்கள் இருந்திடும் ..
Comments
Post a Comment