ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 285
स्वभाव नियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ... (अध्याय १८ - श्लोक ४७)
ஸ்வபாவ நியதம் கர்ம குர்வன்னாப்னோதி கில்பிஷம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 47)..
Svabhava Niyatam Karma Kurvannaapnoti Kilbisham ... (Chapter 18 - Shloka 47)
அர்தம் : ஸ்வபாவத்திற்கு ஏற்ற கர்மங்களினால் பாபம் ஏற்படுவதில்லை ...
ஸ்ரீ க்ருஷ்ணனின் இக்கூற்று குற்றங்களுக்குப் பொருந்தாது .. கொலை , ஏமாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு , "ஸ்வபாவத்தின் உந்துதலில் செய்தேன்" என்று கூறி சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது ..
ஸ்வதர்மத்தின் அடிப்படையில் செய்யப்படும் கர்மங்கள் பாபம் அளிக்காது , என்கிறார் .. ஸஹஜ ஸ்வபாவத்தின் வெளிப்பாடாக செய்யப்படும் கர்மங்கள் பாபம் ஏற்படுத்தாது , என்கிறார் ..
பாபம் என்பது universal இல்லை .. எல்லா இடங்களிலும் , எல்லா காலங்களிலும் அனைத்து ஜனங்களுக்கும் பொதுவானதல்ல .. ஸந்யாஸிக்குப் பாபம் க்ருஹஸ்தனுக்குப் பாபம் ஆகாது .. ப்ராஹ்மணனுக்குப் பாபம் ஆவது க்ஷத்ரியனுக்குப் பாபம் ஆகாது .. ப்ராஹ்மணன் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஶௌச நியமங்கள் ஶூத்ரனுக்குப் பொருந்தாது .. வயஸில் பெரியவர்கள் பாபம் என்று ஒதுக்கும் சில கர்மங்களை ஒரு குழந்தை செய்தால் அதற்குப் பாபம் சேராது .. அதே போல , கடுமையான பனி ப்ரதேஶங்களில் ஸஹஜமாக ஏற்றுக் கொள்ளப் படும் செயல்கள் மற்ற ப்ரதேஶங்களில் பாபமாகக் கருதப் படலாம் .. இதுவே ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்று ..
Comments
Post a Comment