ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 286
सर्वारम्भा हि दोषेण ... (अध्याय १८ - श्लोक ४८)
ஸர்வாரம்பா ஹி தோஷேண ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 48)
Sarvaarambha Hi Doshena ... (Chapter 18 - Shloka 48)
அர்தம் : அனைத்து கர்மங்களும் குறை உள்ளவை ...
குறைகள் உள்ளன என்பதற்காக ஒரு கார்யத்தைச் செய்யாமல் இருப்பது அறியாமை .. அனைத்துக் கர்மங்களுமே குறை உள்ளவை .. போலீஸ் வேலையில் கைது செய்தல் , அடித்தல் , மிரட்டுதல் போன்ற இரக்கம் அற்ற செயல்கள் செய்ய வேண்டி உள்ளது .. நீதிபதியாக இருந்தால் தண்டனைக்கான தீர்ப்பு எழுத வேண்டி இருக்கிறது .. நேர்மையான வ்யாபாரியும் வாங்கிய விலையை விட அதிக விலையில் விற்றால் தான் லாபம் ஸம்பாதிக்க முடியும் .. வீடு கட்ட , மண்ணைத் தோண்டும் போது , பல உயிர்களின் இருப்பிடங்கள் அழிகின்றன .. பல உயிர்கள் கொல்லவும் படுகின்றன .. வ்யவஸாயம் செய்யும் போது , பறவைகளை விரட்ட வேண்டி இருக்கிறது .. வயலின் உள்ளே நுழைந்து விடும் ஆடு மாடுகளை அடித்து விரட்ட வேண்டி இருக்கிறது .. பால் விற்பவன் கன்றுக்குட்டியின் பங்கைப் பறிக்க வேண்டி உள்ளது .. எந்தக் கார்யம் செய்தாலும் அதில் ஏதேனும் குறை இருந்திடும் .. குறை உள்ளது என்பதால் செய்யாமல் இருக்க முடியாது ..
ஒரு கூட்டத்தில் , "தான் செய்திடும் கார்யத்தில் குறை இருப்பதாகக் கருதுபவர்கள் தம் கையை உயர்த்துங்கள்" என்ற போது பெரும்பாலோர் தம் கைகளை உயர்த்தினர் .. "சரி !! இக்கார்யத்தைத் தவிர்த்து விட்டு வேறு எதைச் செய்ய விரும்புகிறீர்கள் ??" என்று கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்கள் அங்கு இருந்த வேறொருவர் குறை உள்ளதாகச் சொன்ன ஒரு கார்யமாகவே இருந்தன ..
ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுவதும் இதைத்தான் .. கைவஶம் உள்ள கார்யத்தைக் கடமையாகக் கருதி செய்து விடுவதே சிறந்தது ..

Comments
Post a Comment