ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 287
लघ्वाशी ... (अध्याय १८ - श्लोक ५२)
லக்வாஶீ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 52)
Laghvaashee ... (Chapter 18 - Shloka 52)
அர்தம் : குறைவாக உண்பவன் ...
உணவிற்கும் அத்யாத்மத்திற்கும் (ஆத்மா மையமான ..) ஸம்பந்தம் உண்டா ? உண்டு என்றே சொல்ல வேண்டும் .. லக்வாஶீ (குறைவாக உண்பவன்) , மிதாஹாரி (அளவாக உண்பவன்) என்ற பதங்கள் அத்யாத்ம உலகத்தில் ப்ரபலமானவை .. ஶரீரத்திற்கு அவஶ்யமான ஸத்து அளிப்பதே உணவின் நோக்கம் .. அவரவர் அன்றாட வாழ்க்கையில் அவரவர் ஈடுபடும் உழைப்பிற்கு அவஶ்யமான ஆற்றலைக் கொடுப்பதே போஜனத்தின் நோக்கம் .. செலவழியும் ஆற்றலுக்கு அவஶ்யமானதை விட அதிகமாக உண்ணப் படும் உணவு கொழுப்பாக மாறி ஶரீரத்தை ஸ்தூலமாக்கும் .. தூக்க நேரத்தை அதிகப் படுத்தும் .. சிந்தனையை மந்தமாக்கும் .. செயாற்றலைக் குறைக்கும் .. மொத்தத்தில் தாமஸத்தை ஊக்குவித்திடும் .. மேலும் , பசிக்காக சாப்பிடும் நிலை மாறி , ஶரீரத்தின் அவஶ்யத்திற்காக உண்ணும் நிலை மாறி , ருசிக்காக போஜனம் உட்கொள்ளும் போது , ராஜஸம் ஊக்குவிக்கப் படுகிறது .. தாமஸமும் ராஜஸமும் உலக விஷயங்களில் கட்டிப் போடுகின்றன .. ஆத்ம விஷயங்களில் இருந்து விலக்குகின்றன .. அத்யாத்ம ஸாதனைகளில் ஈடுபட்டிருப்பவன் குறைவாக உண்பதே நல்லது ..
Comments
Post a Comment